February Horoscope 2023: பிப்ரவரி மாதம் யாருக்கு எழுச்சி, யாருக்கு வீழ்ச்சி? முழு ராசிபலன் இதோ

Horoscope Predictions for February 2023: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இந்த மாதம் எப்படிப்பட்ட பலன்களை அளிக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2023, 03:08 PM IST
  • அலுவலகத்தில் தனுசு ராசிக்காரர்களின் பணி பாராட்டப்படும்.
  • தொழிலதிபர்கள் இந்த மாதம் நல்ல லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், புதிய வியாபாரத்திலும் கூட்டாண்மை ஏற்படலாம்.
  • குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
February Horoscope 2023: பிப்ரவரி மாதம் யாருக்கு எழுச்சி, யாருக்கு வீழ்ச்சி? முழு ராசிபலன் இதோ title=

பிப்ரவரி மாத ராசிபலன்: நாளை பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த மாதம் பல முக்கிய கிரகங்களில் மாற்றங்கள் நிகழவுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இந்த மாதம் சில அதிர்ஷ்டக்கார ராசிகள் லட்சுமி அன்னையின் பரிபூரணமான ஆசியை பெறவுள்ளனர். சிலர் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். 

மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இந்த மாதம் எப்படிப்பட்ட பலன்களை அளிக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம். 

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுப பலன்களைத் தரும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல், பதவி உயர்வுடன் பண லாபத்திற்கான சூழ்நிலையும் இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டிருந்தால், இந்த மாதமும் நல்ல செய்தி கிடைக்கும். 

ரிஷபம்- இந்த ராசிக்காரர்கள் தொழில் துறையில் சிறப்பாக செயல்படுவதுடன், புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். வரப்போகும் சவால்களை எதிர்கொள்ள முடியும். கடின உழைப்பிலிருந்து பின்வாங்க வேண்டாம், பதவி உயர்வு கிடைக்க பலமான வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதை இப்போது செய்யலாம். 

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளும் வரும். நிதி நிர்வாகத்தை முறையாக பராமரிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடையே ஒற்றுமையும், பரஸ்பர புரிதலும் இருக்கும். சுப நிகழ்ச்சிகள் குடும்ப சூழ்நிலையை இனிமையாக்கும்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிஷ்டம் நிச்சயம்!

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பண வரவை ஏற்படுத்திக்கொடுக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் விருத்தி ஏற்படும். அனுகூலமான சூழல் இருக்கும். 

சிம்மம்- குடும்பத்தில் பல விருந்தினர்களின் வருகையால், வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வரவிருக்கும் சவால்களை நீங்கள் சமாளிக்க முடியும். கிரக நிலைகள் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

கன்னி- கன்னி ராசிக்காரர்கள் தொழில் துறையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள், செயல்திறனும் சிறப்பாக இருக்கும், வரவிருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். வர்த்தகர்கள் இரண்டாவது பாதியில் நல்ல வருமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். இதன் காரணமாக வருமானம் அதிகரிக்கும். 

துலாம்- பணத்தை சேமிக்க இதுவே சரியான நேரம். திருமண வாழ்வில் சிறப்பான பலன்கள் காணப்படும். நண்பர்கள் மூலம் அனுகூலமான பல பலன்களை அடைவீர்கள். 

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும், இது வாழ்க்கையில் முன்னேற மிகவும் உதவிகரமாக இருக்கும். நீங்கள் பணியிடத்தில் கடினமாக உழைத்து பெரும் நன்மதிப்பை பெறுவீர்கள். 

தனுசு- அலுவலகத்தில் தனுசு ராசிக்காரர்களின் பணி பாராட்டப்படும். தொழிலதிபர்கள் இந்த மாதம் நல்ல லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், புதிய வியாபாரத்திலும் கூட்டாண்மை ஏற்படலாம். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மகரம்- சூரியம் மற்றும் பிற கிரகங்களின் மாற்றத்தால் மன உளைச்சல் ஏற்படும். அன்பானவர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் மன கஷ்டம் ஏற்பட்டாலும், மாத நடுப்பகுதிக்கு மேல் அவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் சுபமாக இருக்கும். உங்கள் வேலையில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். 

மீனம்- குழந்தைகளின் படிப்பு மற்றிம் முன்னேற்றத்துக்கு இந்த மாதம் மிக நல்ல நேரமாக அமையும். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். 

மேலும் படிக்க | பிப்ரவரி மாத ராசிபலன்: இந்த மாதம் இவர்களுக்கு பணக்கார யோகம், பண மழையில் நனைவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News