மாத ராசிபலன்: ஜனவரி 2023-ன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்
January 2023 Monthly Horoscope: சில ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
2023 ஜனவரி மாத ராசிபலன்: இன்னும் இரு நாட்களில் 2023 புத்தாண்டு பிறக்கவுள்ளது. ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் இந்த மாதம் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும். பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனவரியில் ஏற்படும் கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளில் சுப பலன்களும் சில ராசிகளில் அசுப பலன்களும் கிடைக்கும்.
ஜனவரி 17, 2023 அன்று, மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக்கடவுளான சனி பகவான் தனக்கு பிடித்தமான ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார். இதுதவிர செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றும். இந்த கிரக மாற்றங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜனவரி மாத ராசிபலன்: ரிஷபம்
புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் விசேஷமாக இருக்கப் போகிறது. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். ஆண்டின் முதல் மாதத்தில் நீங்கள் பெரிய அளவிலான பணம் சம்பாதிக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அனைத்து பக்கங்களிலிருந்தும் மகிழ்ச்சி உங்களைச் சூழ்ந்து கொள்ளும். உங்கள் மன அழுத்தங்கள் விலகும். பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த பயணங்கள் மன ரீதியாகவும், நிதி நிலையிலும் அனுகூலமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஜனவரி மாத ராசிபலன்: துலாம்
துலா ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் மாதம் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களது பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் உயர் பதவியை அடையக்கூடும். செல்வச்செழிப்பில் அபரிமிதமான அதிகரிப்பு காணப்படும். புதிய வேலைகளைத் தொடங்க ஆண்டின் முதல் மாதம் சிறப்பான நேரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரி உங்கள் வேலையில் மகிழ்ச்சி அடைவார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பணம் பெற வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஜனவரி மாத ராசிபலன்: தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் ஆரம்பம் அமர்க்களமாக இருக்கப்போகிறது. உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் ஈட்ட அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள். காதல் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் இப்போது உண்டாகும்.
குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். உறவினர்கள் / நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்போது நடந்து முடியும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புத்தாண்டில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், 12 ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ