ராசிகளில் சனி ராஜயோகத்தின் பலன்கள்: ஜனவரி 17, 2023 அன்று, சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறப் போகிறார். ஜோதிடத்தின் படி, கும்பம் சனியின் சொந்த ராசியாகும். அப்படிப்பட்ட நிலையில் உங்கள் ஜாதகத்தில் சனியின் ராஜயோகம் உருவாகி இருந்தால் இந்த யோகம் உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றப் போகிறது. சனியின் ராஜயோகம் மிகவும் அதிர்ஷ்டமான யோகமாகும். இது ஒரு மனிதனை சாதாரண நிலையிலிருந்து மிக விரைவில் உச்சிக்கு கொண்டு செல்லும். சனி ராஜயோகம் எப்படி உருவாகிறது? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இதன் பலன் கிடைக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சனியின் ராஜயோகம் இப்படித்தான் உருவாகிறது
ஜோதிட சாஸ்திரப்படி சனியின் ராஜயோகம் ஷஷ யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஜாதகத்தின் லக்னம் அல்லது சந்திரனில் இருந்து முதல், நான்காம், ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டில் சனி அதன் உச்சமான மகரம், கும்பம் அல்லது துலாம் ராசியில் இருக்கும்போது இந்த யோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் உருவானால், இதனால் பலனடையும் ராசிக்காரர்கள் அனைத்து வித நோய்களிலிருந்து மீண்டு வருவார்கள். இது நபரின் வயதை அதிகரிக்கிறது. ஜாதகத்தில் சனியின் ராஜயோகம் நபரின் பொருளாதார நிலையை பலப்படுத்துகிறது. மேலும் இந்த ராஜயோகம் நடக்கும்போது ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் இருக்காது.
இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்
மேஷம்:
ஜோதிட சாஸ்திரப்படி தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். அடுத்த வருடம் வியாழன் மேஷ ராசியில் இருப்பார். மேஷ ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், செல்வம் தொடர்பான உங்கள் அதிர்ஷ்டம் மாறப்போகிறது. இந்த காலத்தில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்க முழு வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | புத்தாண்டில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், 12 ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்
ரிஷபம்:
ஜனவரி மாதம் சனி இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரம் காரணமாக பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். இந்த ராசியின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டின் அதிபதியாக சனி கருதப்படுகிறார். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தும் நடந்துமுடியும்.
தனுசு:
சனி உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். முதலீட்டின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து பூரண விடுதலை பெறுவார்கள்.
கும்பம்:
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இது உங்கள் இயல்புடன் உங்கள் அதிர்ஷ்டத்தையும் மாற்றும். இந்த பெயர்ச்சிக்கு பிறகு நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களில் இருந்த தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ