சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை, தலைவிதி மாறும்

Sani Peyarchi 2023: ஜனவரி மாதம் நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் பெற்று பல வித நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 28, 2022, 05:52 PM IST
  • ஜனவரி 17ம் தேதி துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • இத்தனை நாட்களாக தடைபட்டிருந்த பணி இப்போது தொடங்கும்.
  • மன அழுத்தம் குறைவாக இருக்கும்.
சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை, தலைவிதி மாறும்

சனிப்பெயர்ச்சி 2023: சனி பகவானின் ராசி மற்றும் நிலை மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறன. மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக்கடவுளான சனி பகவான், ஜனவரி 17, 2023 இல் கும்ப ராசியில் நுழைவார். இதனால் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து முக்தி கிடைக்கும். 

பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சனி பகவானின் ராசி மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். அக்டோபர் 23, 2022 அன்று, சனி பகவான் மகர ராசியில் வக்ர நிவர்த்தியானார். அவர் ஜனவரி 17, 2023 அன்று கும்ப ராசியில் பிரவேசிக்கும்போது, ​​மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டமும் கடக ராசி மற்றும் விருச்சிக ராசியில் சனி தசையின் தாக்கமும் தொடங்கும். 

ஏழரை நாட்டு சனி:

சனி பகவான் பல ராசிகளில் ஏழரை ஆண்டு காலம் சஞ்சரிக்கும் நிலையை ஏழரை நாட்டு சனி என்று கூறுகிறோம். சனி 12 ராசிகளில் சஞ்சரிக்க 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதாவது சனி ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார். ஜாதகத்தில் ஜன்ம ராசியிலிருந்து 12வது வீட்டில் சனியின் சஞ்சாரம் தொடங்கும் போது, ​​அந்த நேரத்திலிருந்து அந்த ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். ஜனவரி மாதம் நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் பெற்று பல வித நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க | 2023 ஆம் ஆண்டின் முக்கிய பெயர்ச்சிகள், எந்த ராசிகளுக்கு அதிர்ஷடம்

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதுவரை இருந்துவந்த துன்பங்கள் தீரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மன உளைச்சல், நோய்கள் நீங்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும்.

மிதுனம்: 

கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் மிதுன ராசியில் சனி தசையின் தாக்கம் முடிவுக்கு வரும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். தொழிலில் நல்ல காலம் தொடங்கும்.

துலாம்: 

ஜனவரி 17ம் தேதி துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். இத்தனை நாட்களாக தடைபட்டிருந்த பணி இப்போது தொடங்கும். மன அழுத்தம் குறைவாக இருக்கும். மன மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். பணம் மற்றும் தொழில் துறையில் வெற்றி பெறுவீர்கள்.

கும்ப ராசியில் சனி பெயர்ச்சியானவுடன், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் சனி தசை தொடங்கும். அதன் தாக்கத்தால் மன, பொருளாதார மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குருபெயர்ச்சியால் உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு புத்தாண்டு பொன் போல் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News