குரு -சந்திரன் இணைவு & கஜகேசரி ராஜ்யோகம்: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றுகிறது. இந்த ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். கிரகங்களின் வக்ர பெயர்ச்சி, இயக்கத்தை மாற்றும் நிலை மற்றும் யுதி எனப்படும் கிரகங்கள் இணையும் நிலை ஆகியவை அனைத்து ராசி அறிகுறிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது, ​​வியாழன் எனப்படும் குரு பகவான் ஏற்கனவே மீனத்தில் அமர்ந்துள்ளார். செப்டம்பர் 11 இரவில், சந்திரன் மீனத்தில் நுழைந்துள்ளார். இந்நிலையில், மீனத்தில் சந்திரனும் குரு பகவானும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதன் பலன் 12 ராசிகளுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால் அதன் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான பலன்களை கொடுக்க உள்ளதாக ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜ யோகம் பலன் தரும். இந்த யோகம் ரிஷப ராசிக்கு 11ம் வீட்டில் அமைகிறது. இந்த வீடு வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது. எனவே, இந்த யோகத்தால் வருமானம் அபரிமிதமாக உயர வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்களுக்கு இந்தச் சேர்க்கை சிறந்த பணப் பலன்களைத் தரும்.அதே நேரத்தில், அரசாங்க வேலை தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வழக்கு அல்லது சச்சரவு ஏதேனும் இருந்தால், உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். அரசு துறை சார்ந்த பணிகள் நிறைவடையும். இந்த காலகட்டத்தில், நீங்கள் புதிய வருமான மூலத்தில் இருந்து பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். இது லாபம் தரும்.


மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்


கடகம்:


குரு பகவான் மற்றும் சந்திரன் இணைவதால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும். இந்த பெயர்ச்சி காரணமாக, ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் இந்த யோகம் உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். அதே சமயம் வெளிநாட்டுப் பயண ஆசையும் இக்காலத்தில் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கூடும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். கௌரவம் உயரும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். திடீர் பண ஆதாயம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.


விருச்சிகம்:


இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சிறப்பாக அமையும். குரு - சந்திரன் இணைவு ஐந்தாம் வீட்டில் உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். அதே சமயம் குழந்தை பிறக்கும் வாய்ப்பும் உள்ளது. வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு. கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். இந்த நேரம் ஆசிரியர்கள் மற்றும் மார்க்கெட்டிங் தொடர்புடைய நபர்களுக்கு சிறப்பான நேரமாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


 மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ