SBI பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் பணம் பன்மடங்காக பெருகும்

எஸ்பிஐயின் மூன்று பரஸ்பர நிதிகளான எஸ்பிஐ டெக்னாலஜி ஆபர்சூனிடீஸ் பண்ட், எஸ்பிஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி மற்றும் எஸ்பிஐ மேக்னம் ஈக்விட்டி இஎஸ்ஜி ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபத்தைப் பெறலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 12, 2022, 06:38 PM IST
  • மாதாந்திர எஸ்ஐபியைத் தொடங்கிய முதலீட்டாளர்களுக்கு பணம் பன்மடங்காகியுள்ளது.
  • பரஸ்பர நிதியங்கள் முதலீட்டாளர்களுக்கு பெரும் வருமானத்தை அளித்துள்ளன.
SBI பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் பணம் பன்மடங்காக பெருகும் title=

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியில் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெற விரும்பினால், இங்கே குறிப்பிட்டுள்ள எஸ்பிஐயின்  மூன்று மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவது மிகவும் சிறந்தது. எஸ்பிஐ டெக்னாலஜி ஆபர்சூனிடீஸ் பண்ட் (SBI Technology Opportunities Fund), எஸ்பிஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி (SBI Focused Equity) மற்றும் எஸ்பிஐ மேக்னம் ஈக்விட்டி இஎஸ்ஜி ஃபண்ட் (SBI Magnum Equity ESG Fund)ஆகயவை லாபத்தை அள்ளித் தரும் என நிதி வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில், இந்த மூன்று எஸ்பிஐ பரஸ்ப்ர நிதியங்களும் முதலீட்டாளர்களுக்கு பெரும் வருமானத்தை அளித்துள்ளன.

எஸ்பிஐ டெக்னாலஜி ஆபர்சூனிடீஸ் பண்ட்

இதில் முதலீட்டாளர், 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்திருந்தால், அவருடைய ரூ.1 லட்சம் இன்று ரூ.3.26 லட்சமாக மாறியிருக்கும். இந்த எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,000-ல் மாதாந்திர எஸ்ஐபியைத் தொடங்கிய எஸ்ஐபி முதலீட்டாளர்களின் முதலீட்டிற்கான இன்றைய முழு மதிப்பு ரூ.14.51 லட்சமாக உள்ளது.

மேலும் படிக்க: UIDAI JOBS: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வேலைவாய்ப்பு: முழு விவரம்

எஸ்பிஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி

SBI-ன் இந்த மியூச்சுவல் ஃபண்டின்,  மொத்த தொகை மற்றும் மாதாந்திர SIP இரண்டிலும் முதலீட்டாளர்களுக்கு  பெரும் வருமானத்தை அளித்துள்ளது. ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பிஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி திட்டத்தில் ரூ.1 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்திருந்தால், இன்று அவர் செய்த முதலீட்டின் மதிப்பு ரூ.2.19 லட்சமாக இருக்கும். அதேசமயம் ரூ.10,000 மாதாந்திர SIP முதலீட்டாளர்களிடம் இன்று ரூ.10.23 லட்சம் இருக்கும்,

எஸ்பிஐ மேக்னம் ஈக்விட்டி ஈஎஸ்ஜி ஃபண்ட்

SBI வழங்கும் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டமானது கடந்த 5 ஆண்டுகளில் அதிக பண வரவை தந்துள்ள பரஸ்பர நிதிய திட்டங்களில் ஒன்றாகும். எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலீட்டாளர் மொத்தமாக ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், இன்று அவருடைய முதலீட்டின் மதிப்பு ரூ.1.93 லட்சமாக இருந்திருக்கும்.  எஸ்பிஐ மேக்னம் ஈக்விட்டி இஎஸ்ஜி ஃபண்டில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபியின் முதலீட்டு மதிப்பு ரூ.9.68 லட்சமாக இருக்கும்.

மேலும் படிக்க: இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News