Chandra Kiraganam 2024 Tips: சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஒரு அதிசயமான நிகழ்வு என்ற நம்பிக்கை இந்திய மக்களிடையே பரவிக் கிடக்கிறது. இந்த கிரகணங்கள் நடக்கும்போது, இந்த விஷயங்கள் மட்டுமே செய்யணும், இந்த விஷயங்கள் செய்யக்கூடாது என பலர் கூறுவது உண்டு. அதுமட்டும் இல்லாம கிரகண நிகழ்வு நடக்கும்போது, சில ராசிக்காரர்களுக்கு நிறைய மாற்றங்கள் ஏற்படும் எனவும் சொல்வது உண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த 2024 ஆம் ஆண்டினுடைய கடைசி சந்திர கிரகணம் ஏற்படும் நாளில் கோவிலுக்கு செல்ல சில அஞ்சுவார்கள். வீட்டிலேயே வழிபாடு செய்வது நல்லது. தேவையில்லாம வெளியில் செல்ல வேண்டாம். குறிப்பா கர்ப்பிணி பெண்கள் வெளியில போகாமல் இருப்பதே சிறப்பு.


2024 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தால் யாரெல்லாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்? இந்த கிரகணத்தின் மூலமா என்னவெல்லாம் நடக்கப்போகிறது? இது எத்தனை மணி நேரம் நடக்கப்போகிறது? நம்ம இந்தியாவில் சந்திரன் கிரகணம் தெரியுமா? தெரியாதா? எந்த ராசிகார்களுக்கு ஆபத்து? போன்ற கேள்விகளுக்கு விடை காண்போம்.


இந்தியாவில் சந்திர கிரகணம் தெரியுமா? 


இந்த 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம், இந்த மாதம் 18 ஆம் தேதி நிகழவிருக்கிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் ஐரோப்பா, ஆசியாவின் பெரும் பகுதி, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் இந்த கிரகணத்தை பார்க்கலாம்.


சந்திர கிரகணம் எத்தனை மணி வரை நீடிக்கும்?


இந்த சந்திர கிரகணம் 18 ஆம் தேதி காலை 6:12 முதல் 10:17 மணி வரை என நான்கு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் சந்திர கிரகணம் நீடிக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. 


இந்தியாவில் சந்திர கிரகணம் பாதிப்பு இருக்குமா?


வேத சாஸ்திரங்களின் படி, இந்த நேரத்தில் எந்த நல்ல காரியங்களையும் செய்ய வேண்டாம், செய்ய மாட்டார்கள். அதேபோல இந்தியாவில் இந்த கிரகணமானது தெரியாவிட்டாலும் கூட, இதனுடைய பாதிப்பு அனைவராலும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 


மேலும் படிக்க - இன்னும் 9 நாட்களில் சந்திர கிரகணம்.. அதீத கவனம் இந்த ராசிகளுக்கு தேவை


சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்கு லாபம்?


அதனால் முக்கியமாக இந்த சந்திர கிரகணத்தால குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளும் வாழ்க்கையில் நிம்மதியும் கிடைக்கும். அவ்வாறு பலன் பெறக்கூடிய ராசிகள் எவை எனப் பார்ப்போம். 


சந்திர கிரகணம் 2024: மேஷம்  


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் முக்கிய பணிகளும், காரியங்களும் சிறிய முயற்சியிலேயே முடிவடையும். வருமானத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் எந்தவிதமான குறையும் இருக்காது. அதேபோல உயர் அதிகாரிகளிடம் இருந்து அங்கீகாரம் மரியாதையும் பெறக்கூடிய நேரமாக இருக்கப்போகிறது. பணியில இருப்போருக்கு பதவி உயர்வு கண்டிப்பா கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய அளவிலான லாபம் கிடைக்கும். இந்த கிரகணத்தின் மூலமாக அனைத்து காரியங்களும் மேஷ ராசிக்காரர்களுக்கு நடந்தேறும்.


சந்திர கிரகணம் 2024: ரிஷபம்  


ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் முடிவடையக்கூடிய காலகட்டமாக இந்த காலகட்டம் இருக்கும். உறவினர்கள் மூலமாக நல்லதொரு செய்தி வரும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பணிபுரியக்கூடிய சூழல் சாதகமானதா இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் எளிதில் வெற்றி பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.


சந்திர கிரகணம் 2024: கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகண நேரத்தில் நிதி பிரச்சனைகள் தீர்ப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த சில பிரச்சனைகள் எதிர்பாராமல் தீரும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். வாழிய நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். ஆரோக்கியம் மிகவும் சாதகமானதாக இருக்கும். தற்செயலாக நல்ல செய்தி காதில் வந்து விழும். 


மேலும் படிக்க - புரட்டாசி மாத பலன்கள் 2024: சனியும் குருவும் இணைவதால் வெற்றி நிச்சயம்.. இந்த ராசிக்கு ராஜ யோகம்


சந்திர கிரகணம் 2024: கன்னி ராசி 


கன்னி ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் வசிக்கக்கூடிய பிள்ளைகளால் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். முக்கியமான காரியங்கள் குறித்த நேரத்தில் முடிவடையும். மேலும் கன்னி ராசியினர் எடுத்த எந்த முயற்சியுமே வெற்றி அடையும். குடும்பத்தில் நல்லதொரு முன்னேற்றங்கள் ஏற்படும். நிதி விவகாரங்கள் சுவாரசியமானதாக இருக்கும். தொழில் மற்றும் வேலைகளில் முன்னுரிமை அதிகரிக்கும். 


சந்திர கிரகணம் 2024: துலாம் 


துலாம் ராசிக்காரர்களுக்கு ரொம்பவே திருப்திகரமானதாக இருக்கும். நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய காலகட்டமாக இருக்கும். உடல்நலம் மற்றும் வருமானத்தில் எந்த பாதிப்பும் கிடையாது. மாணவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பா உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் திட்டமிட்டபடி முடிவடையும். நிதி பிரச்சனைகளில் இருந்து மன அழுத்தம் வெகுவாக குறையும். வருமானத்தை பெருக்கக்கூடிய முயற்சிகள் கண்டிப்பாக தொடரும். 


சந்திர கிரகணம் 2024: தனுசு 


தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்துல நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதனால் கவனமாக தொழில் மேற்கொள்வது நல்லது. உரிய நேரத்தில் வரவேண்டிய பணம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு கூட உண்டு. முக்கியமான பணிகள் விரைந்து முடிவடையும். உறவினர்களுடைய வருகையால் வீட்டில் ஒரு பண்டிகை காலம் போன்ற சூழ்நிலை உங்களுக்கு உருவாகலாம். வேலை இல்லாதவங்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கண்டிப்பாக அமையும். தூரத்து உறவினர்கள் மூலமாக நல்லதொரு திருமண உறவு அமையும். அதேநேரத்தில் மன அழுத்தம் மற்றும் எரிச்சல் வெளிபடும். சிலருக்கு இது கஷ்ட காலமாக கூட இருக்கலாம்.


மேலும் படிக்க - பணம், நிம்மதி, ஆரோக்கியம் என அடுத்த 10 நாட்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரே ஜாக்பாட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ