பணம், நிம்மதி, ஆரோக்கியம் என அடுத்த 10 நாட்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரே ஜாக்பாட்!

Mithuna Rashifal in Tamil: மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரைக்கும் இந்த வாரத்தில் நீண்ட நாட்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்ல பல செய்திகள் நிச்சயமாக உங்களுக்கு கிடைப்பதற்கான யோகம் உண்டு.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 3, 2024, 12:21 PM IST
பணம், நிம்மதி, ஆரோக்கியம் என அடுத்த 10 நாட்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரே ஜாக்பாட்! title=

Gemini Sign Prediction September: கடந்த சில நாட்களாக பல இடஞ்சல்களை சந்தித்து வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. அந்த நல்ல தருணமாக இன்று முதல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை இருக்கும். இந்த ஒருவாரம் நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு மிக சிறப்பான அதிரடியான மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் நடக்கவுள்ளது. அனைத்து விசியங்களில் உங்களுக்கு யோகம் ஏற்படப் போகிறது. 

மிதுன ராசிக்காரர்களுக்கு அதிரடியான முன்னேற்ற வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கக்கூடிய வலுவான கிரக அமைப்பில், மிகவும் சாதகமான அமைப்பில் சுகஸ்தானம் ஆகிய நான்கில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். தைரியஸ்தானத்தில் ராசியின் அதிபதியாக இருக்கக்கூடிய புதன் அமர்ந்த்திருக்கிறார். மேலும் துவக்கத்தில் இருந்தே சந்திரன் வளர்பிறை சந்திரனாக பலம் பெற போகிறார். 

எனவே கையில் எடுக்கக்கூடிய காரியங்கள் அனைத்துமே வெற்றிகரமாகவும் இனிமையாகவும் நல்ல முன்னேற்ற வாய்ப்புகளை நிறைவாக பெற்று தரக்கூடிய வகையிலும் அமைவதற்கான முதன்மையான யோகம் என்ற தருணத்தில் வலுவாக கிடைக்கிறது. எனவே மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரைக்கும் இந்த வாரத்தில் நீண்ட நாட்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்ல பல செய்திகள் நிச்சயமாக உங்களுக்கு கிடைப்பதற்கான யோகம் நிச்சயம் உண்டு.

குறிப்பாக ராசியின் அதிபதி உச்சம் பெற்ற விரைவில் சஞ்சரிக்க போகிறார். அதற்கு முன் ஆட்சி பலம் பெற்ற சூரியனுடன் இந்த வாரத்தில் இணைந்து சஞ்சரிக்கிறாருங்க. இந்த வாரத்தின் துவக்கத்தில் சந்திரனும் அங்கு மூன்றாமிடத்தை வலுப்படுத்தகிறார். அதற்குப் பிறகு வளர்பிறை சந்திரனாக சந்திரன் வலம் வரப்போகிறார். 

எனவே நினைத்த காரியங்கள் அனைத்தும் வளர்ச்சி பாதையை நோக்கி நகரும். இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்கள் எதிர்பார்த்த நல்ல நேரம் வந்திருக்கக்கூடிய இனிமையான தருணமாக மிக சிறப்பான அதிரடியான மாற்றங்களை சந்திப்பதற்கான யோகம் உங்களுக்கு கிடைக்கும். 

மேலும் படிக்க - சுக்கிரன் பெயர்ச்சி.. மகா அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு

மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்படும் யோகம் என்னென்ன?

- திட்டமிட்டதை விட அதிரடியான முன்னேற்ற வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கக்கூடிய வலுவான கிரக அமைப்பு ஏற்பட்டுள்ளது. 

- கையில் எடுக்கக்கூடிய காரியங்கள் அனைத்துமே வெற்றிகரமாகவும் இனிமையாகவும் நல்ல முன்னேற்ற வாய்ப்புகளை நிறைவாக பெற்று தரக்கூடிய வகையிலும் யோகம் இருக்கும். 

- வளர்ச்சி பாதையில் ஏற்பட்டு வந்த குறுக்கீடுகள் இந்த தருணத்தில் விலகும். 

- கல்வியியல் மிகப்பெரிய அளவில் முன்னேற்ற வாய்ப்புகள் நிறைவாக கிடைக்கும்.

- பல நல்ல செய்திகள் நிச்சயமாக உங்களை மகிழ்விக்க கூடிய வகையில் உங்களை வந்து சேரும். 

- நீண்ட நாட்களாக சந்தித்து வரக்கூடிய உடல் ரீதியான ஆரோக்கிய தொல்லைகள் குறையும்.

- குடும்ப சூழ்நிலை பொருத்தவரைக்கும் வருமானம் நிச்சயமாக போதிய அளவிற்கு இருக்கும். அதோடு மட்டுமல்லாது வீண் விரைய செலவுகள் இந்த தருணத்தில் கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. 

- எதிர்பார்ப்பு காத்திருந்த நல்ல சுப செய்திகள் திருமணம் உட்பட பல்வேறு வகையான சுப செய்திகள் நீங்கள் பார்ப்பதைவிட அற்புதமாக இந்த தருணத்தில் அமைவதற்கான வாய்ப்பு இருக்கு. 

- அரசு வேலை பணியில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு அரசின் சலுகைகளும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிக சிறப்பாக 

- பல்வேறு வகையான தடைகள் சிரமங்கள் இருந்தாலும் அவற்றை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய முதன்மையான யோகம் கிடைக்கும். 

- இந்த வாரத்தில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அப்படி மேற்கொள்வதால் தங்கள் வாழ்வில் சந்திக்க கூடிய பெருவாரியான சிக்கல்கள் விலகி நீண்ட நாட்களாக எதிர்பார்க்கக் கூடிய நல்ல செய்தி நிச்சயமாக கிடைக்கும். 

மிதுன ராசிக்காரர்களுக்கான எச்சரிக்கை

செவ்வாய் ஜென்மத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் இந்த தருணத்தில் சற்று அனைத்து விதமான பணிகளிலும் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் அலட்சியம் காட்ட வேண்டாம் செய்யக்கூடிய சிறு தவறு கூட அதிக விரயத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க - ராசிப் பெயர்ச்சிக்கு முன்னதாகவே வேலையைக் காட்டத் தொடங்கும் கிரகங்கள்! என்ன கிரகாச்சாரம் இது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News