இன்னும் 4 நாட்களில் சந்திர கிரகணம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
Chandra Grahanam Horoscope : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்னும் 4 நாட்களில் அதாவது மார்ச் 25 ஆம் தேதி நிகழப் போகிறது. இந்த நாளில் தான் பங்குனி உத்திரம் பண்டிகையாகும், மேலும் இதே நாளில் தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படிகிறது. எனவே இந்த சந்திர கிரகணம் நிகழ்வானது 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.
Chandra Grahan 2024: இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் வருகிற மார்ச் 25ஆம் தேதி அதாவது பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை நாளில் நிகழப் போகிறது. வேத ஜோதிட சாஸ்திரப்படி, 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் ஏற்படவது மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சந்திர கிரகணமானது காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை 03.02 மணி வரை நீடிக்கும். முன்னதாக இந்த சந்திர கிரகணம் 1924 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும், இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். ஹோலி மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் ஒரே நாளில் ஏற்பட உள்ளதால், அதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும்.
அதுமட்டுமின்றி இந்த சந்திர கிரகணம் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நிகழப்போகிறது. பொதுவாக கிரகணமானது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த அபூர்வ சந்திர கிரகணத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பண வரவு, சுப யோகம் உண்டாகும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகணத்தால் சுப பலன் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, அந்தஸ்த்து கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் சாதகமாக நடக்கும். வியாபாரம் விரிவடையும். திடீர் பண ஆதாயமும் உண்டாகும். வேலையால் மகிழ்ச்சி பெறுவீர்கள்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகணத்தால் அதிர்ஷ்டம் தரும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலைகள் எளிதாக நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கலாம். முக்கியமான பொறுப்புகளை பெறுவீர்கள். சம்பள உயர்வு கிடைக்கலாம். வணிக வர்க்கத்தினருக்கு லாபம் அதிகரிக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும்.
கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகணத்தால் மிகவும் நன்மை பயக்கும். கடின உழைப்புக்கு ஏற்ப முழு பலன் கிடைக்கும். அறிவால் அங்கீகாரம் பெறுவீர்கள். புகழ் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரம் பெருகும், புதிய ஒப்பந்தங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகணத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். சுப பலன்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வெற்றிகள் குவியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உதயமானார் சனி: இந்த ராசிகளுக்கு இனி சுகம் மட்டுமே... சோதனைகளை விரட்டிவிட்டார் சனி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ