மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சக்கைப்போடு போடவுள்ள ராசிகள் இவைதான்... உங்க ராசி என்ன?

Sukran Peyarchi Palangal: இதன் தாக்கம் அனனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், மீனம், துலாம் ஆகிய ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 21, 2024, 12:52 PM IST
  • ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபத்தை அள்ளித்தரும்.
  • இந்த நேரம் மீன ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
  • சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சக்கைப்போடு போடவுள்ள ராசிகள் இவைதான்... உங்க ராசி என்ன? title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் பெயர்ச்சி, அதாவது ராசியில் ஏற்படும் மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சிகள் மக்களின் வாழ்வில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. திருமண வாழ்க்கை, பேச்சாற்றல், செழுமை, உலக இன்பம், கலை, அழகு, பண்பு, பணம், ஈர்ப்பு, ஆடம்பரம், அன்பு, பெருமை, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் மார்ச் 31, 2024 அன்று, தான் உச்சம் பெற்றுள்ள ராசியான மீனத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த மாற்றம் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றாது. 

மாளவ்ய ராஜயோகம்:

மீனத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றது. இந்த யோகம் செல்வம், செழிப்பு மற்றும் பொருள் வசதிகளின் அதிகரிப்பை குறிக்கிறது. இதன் தாக்கம் அனனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், மீனம், துலாம் ஆகிய ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிகப்படியான நற்பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்:

மேஷம் (Aries): 

வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். இதன் மூலம் லாபம் அதிகரிக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும். பணியிடத்தில் வெற்றியும், கடின உழைப்பின் பலனும், பயண வாய்ப்புகளும் கிடைக்கும். தைரியமும், வீரமும் கூடும். அனைத்து பணிகளையும் முழு முனைப்புடன் செய்து முடிப்பீர்கள். 

ரிஷபம் (Taurus): 

ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபத்தை அள்ளித்தரும். இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால், வியாபாரத்தில் லாபம், வேலையில் பதவி உயர்வு, பண ஆதாயம் ஆகியவை கிடைக்கும்.

கடகம் (Cancer): 

சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் காணலாம். திடீர் பண வரவால் ஆதாயம் கூடும். 

மேலும் படிக்க | உதயமானார் சனி: இந்த ராசிகளுக்கு இனி சுகம் மட்டுமே... சோதனைகளை விரட்டிவிட்டார் சனி

சிம்மம் (Leo): 

சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சியால் கல்வியில் வெற்றியும் உறவுகளில் இனிமையும், குழந்தைகளால் மகிழ்ச்சியும் வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும்.

துலாம் (Libra) 

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி அதிகப்படியான பலன்களை அளிக்கும். அலுவலக பணிகளில் இருப்பவ்ரகளுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டு இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். 

தனுசு (Sagittarius): 

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிர்ஷ்டம், பணப் பலன்கள், பயண வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் மூலம் நல்ல தொடர்புகளை பெறுவீர்கள். வியாபாரம் பெருகும்.

மீனம் (Pisces): 

சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளதால், இந்த நேரம் மீன ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். செல்வச் செழிப்பு, பொருள் மகிழ்ச்சி மற்றும் இன்பம் ஆகியவற்றைப் பெறுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 100 ஆண்டுக்கு பிறகு சந்திர கிரகணம்: இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - @ZEETamilNews ட்விட்டர் - @ZeeTamilNews டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News