Maha Shivratri 2024: மஹாசிவராத்திரி அன்று என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
Maha Shivratri 2024: மஹாசிவராத்திரி பண்டிகையானது மார்ச் 8ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான நாளில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்று மகாசிவராத்திரி. இந்து கலாச்சாரத்தில் இந்த நாள் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த தினத்தில் நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் ஒன்றாக அமர்ந்து இந்த நாளை கொண்டாடுகின்றனர். காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல; இது ஒரு ஆன்மீக பயணமாகும், இது பக்தர்களுக்கு சுயமாற்றம் மற்றும் தெய்வீக ஒற்றுமைக்கான வாய்ப்பை வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் அனுசரிக்கப்படும் மாசிக் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி மிகவும் முக்கியமானது. மகாசிவராத்திரியின் போதுவிரதம் இருப்பதும், உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதும் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
ஏனெனில் இது ஆண்டு முழுவதும் சிவனை வழிபடுவதற்குச் சமம், மேலும் ஒருவர் முக்தி மற்றும் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடவும் உதவும். சில உணவுகள் மற்றும் செயல்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலம், தனிநபர்கள் ஆன்மீக ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களைத் தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். சில பக்தர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் நோன்பு நோற்கத் தேர்வு செய்கிறார்கள், இன்னும் பலர் விரதத்திற்கு ஏற்ற உணவுகளான சாமை, தினை, பூசணி, உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தயிர் போன்றவற்றைக் கடைப்பிடிக்கின்றனர். மேலும் கோதுமை, அரிசி, உப்பு, சில காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பிற உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம். விரதம் இல்லாதவர்கள் கூட மகா சிவராத்திரி அன்று அசைவ உணவுகள், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உலர் பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் ஆகியவை ஆற்றலை அதிகமாக வைத்திருக்க சிற்றுண்டியாக உட்கொள்ள வேண்டும்.
2024 மஹாசிவராத்திரி அன்று செய்ய வேண்டியவை
மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதற்குத் பக்தர்கள் தங்கள் உடலையும் மனதையும் தயார்படுத்த ஒரு வேளை மட்டுமே சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். விரதத்தை கடைபிடிக்கும் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு புது ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். மிகுந்த அர்ப்பணிப்புடனும் பக்தியுடனும் ஒரு நாள் முழுவதும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிவலிங்கத்தை வழிபடுவதற்கு முன் நீர், பால், குங்குமம், தேன், கங்கை நீர் கலந்து குளிப்பாட்ட வேண்டும். துதிகளைப் பாடுங்கள், மந்திரங்களை உச்சரிக்கவும், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனைகளை ஓதவும்.
2024 மஹாசிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை
சிவபெருமானுக்குப் படைக்கப்பட்ட எதையும் உட்கொள்வதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், சிவலிங்கத்திற்கு தேங்காய் நீரை வழங்க வேண்டாம். அதே போல சிவபெருமானுக்கு கேவடா, சம்பா போன்ற பூக்களைச் சமர்ப்பிக்க வேண்டாம். இந்த பூஜையின் போது, பக்தர்கள் குங்குமத் திலகத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக சந்தனப் பசையைத் தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். வாதங்கள், மோதல்கள் அல்லது எதிர்மறையை உருவாக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ