ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும். சில சமயங்களில் ஒரே ராசியில் பல கிரகங்கள் இணைவதால் சுப யோகம் உண்டாகும். இது சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே சாதகமான விளைவைக் கொடுக்கும். அதன்படி வருகிற பிப்ரவரி 18 ஆம் தேதி கும்ப ராசியில் திரிகிரஹி யோகம் உருவாக உள்ளது. ஏனெனில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் பெயர்ச்சியடைந்துள்ளார். மேலும் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி சூரியனும் கும்ப ராசியில் பெயர்ச்சியடைந்துள்ளார். அத்துடன் பிப்ரவரி 18 ஆம் தேதி, சந்திரனும் கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இதனால் கும்பத்தில் மூன்று கிரகங்கள் சேர்க்கை திரிகிரஹி யோகத்தை உருவாகும். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் திரிகிரஹி யோகம் சாதகமாக அமையும். உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் இடமாகக் கருதப்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும்.


ரிஷப ராசி: திரிகிரஹி யோகம் ரிஷப ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த பெயர்ச்சி உங்கள் பிறந்த ஜாதகத்தின் கர்ம வீட்டில் நடக்கும். இதன் மூலம் நீங்கள் தற்செயலாக பணம் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் வருமானம் கூடும். பணியிடத்தில் புதிய பதவிக்கான பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.


மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம் நல்ல பலன் தரும். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் திரிகிரஹி யோகம் உருவாகும். இது செல்வம் மற்றும் பேச்சு உணர்வு என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வியாபாரத்தை அதிகரிக்கும். மேலும் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும்.