Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரகங்களின் ராசிகள் தவிர நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. கிரகங்களின் மாற்றங்களால் பல வித ராஜயோகங்களும் உருவாகின்றன. இவற்றால் அனைத்து ராசியினருக்கும் சுப பலன்கள் கிடைக்கின்றன. இந்த ராஜயோகங்களில், மாளவ்ய ராஜயோகம் மிகவும் சுபமானதாக கருதப்படுகின்றது. இது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் அல்லது ராசியில் இருக்கும்போது மாளவ்ய யோகம் உருவாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மே 19, 2024 அன்று சுக்கிரன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் மாளவ்ய யோகம் உருவாகி வருகிறது. இந்த ராஜயோகத்தின் பலன்கள் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதன் சுப பலன்களால் அதிகப்படியான அற்புதங்கள் நிகழும். பண வரவு அதிகமாகும். லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான மாளவ்ய ராஜயோகத்தின் காரணமாக அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


ரிஷபம் (Taurus)


ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான மாளவ்ய ராஜயோகம் மிகவும் சாதகமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மற்றும் மாளவ்ய யோகத்தால் அதிக சுப பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும். வியாபாரத்தில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் அனைத்துத் துறைகளிலும் ஆதாயம் அடைவார்கள்.


மேலும் படிக்க | நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு!


கன்னி (Virgo)


சுக்கிர பெயர்ச்சியால் உருவான மாளவ்ய யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். உங்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். வெற்றியை அடைவதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. பல நல்ல இடங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் வரலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்வில் மகிழ்சியும் திருப்தியும் இருக்கும். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் இருக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள்.


கும்பம் (Aquarius)


கும்ப ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் அதிக பலன்களை அளிக்கும். இந்த யோகத்தின் சுப பலன்களால் உங்கள் வசதிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் இருந்து சில நல்ல தகவல்களைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். பல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய வாகனம், சொத்து வாங்கும் யோகம் உள்ளது. உங்களின் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், வேகமாக முன்னேறுவீர்கள். உங்கள் நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தேவர்களுக்கே குருவாக இருந்தாலும் 4 ராசிக்காரர்களுக்கு தொல்லை கொடுக்கும் குரு உதயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ