சரணாகதியே முக்திக்கு வித்து என உணர்த்திய நரசிம்ம ஜெயந்தி நாள்! மே 21 ராசிபலன்!

Today Rasipalan 21-05-2024: மே மாதம் 21ம் நாள் செவ்வாய்க்கிழமை நாளான இன்று எந்த ராசிக்காரர்கள் மனதில் உள்ளதை வெளியே சொல்லி மாட்டிக் கொள்வார்கள்? எந்தெந்த ராசியினரின் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்? தெரிந்துக் கொள்வோம்

May 21 Rasipalan: குரோதி ஆண்டு, வைகாசி மாதம் எட்டாம் நாள், சுவாதி நட்சத்திர நாளான இன்று நரசிம்ம ஜெயந்தி....  குரோதி ஆண்டு வைகாசி 8ம் நாளான இன்று யாரின் ராசி எப்படியிருக்கும்?  

1 /14

பக்தர்கள் அழைத்த குரலுக்கு தூணைப் பிளந்தும் வருவேன் என்று காட்டிய காக்கும் கடவுள் விஷ்ணுவின் அவதார நாளான இன்று யாருடைய பக்தி மெச்சப்படும்? தெரிந்துக் கொள்வோம்

2 /14

பேச்சை குறைத்து செயலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது.  வியாபாரம் தொடர்பான செயல்களில் பொறுமை அவசியம், மனதில் பகைமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்...  

3 /14

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கும்பம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் அமையும்

4 /14

சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். மகரம் ராசியினருக்கு சொந்த ஊருக்கு செல்ல நேரிடலாம். உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. விருந்தினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும். நிர்வாக துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் இன்று

5 /14

நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தனுசு ராசியினருக்கு வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு காரியங்கள் கைகூடும், பண விவகாரங்களில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி கற்பவர்களுக்கு சுமூகமான சூழல் உருவாகும் 

6 /14

விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். கனிவான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். மனதளவில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும். வழக்கமான பணிகளாக இருந்தாலும் கவனத்தோடு செயல்படவும், பணியிடத்தில் பிரச்சனை ஏற்படலாம்  

7 /14

விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவும். போட்டியும் பொறாமையும் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும், உங்கள் அணுகுமுறைகளால் முயற்சிகளில் மாற்றம் பிறக்கும். எதிர்பாராத சில அனுபவங்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும்

8 /14

மனதில் நிம்மதி பெருகும், குழப்பம் விலகும். காரிய அனுகூலம் ஏற்படும். தடைபட்டு வந்த வேலையும் மதிப்பும் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். முதலீடுகளினால் மனம் திருப்தியடையும்  

9 /14

மனதிற்கு பிடித்த பணிகளை செய்யும் வாய்ப்பு சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஏற்படும். அரசுப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வாகனங்களில் செல்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் முயற்சிகள் வெற்றியடையும்

10 /14

மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்றாலும் உறவுகளால் அலைச்சல் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் ஏற்படும் சில மாற்றங்களால் வரவு அதிகரிக்கும்

11 /14

வருமானம் உயரும், உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவதன் அவசியம் புரியும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். பயணங்கள் சாதகமாக அமையும்.  

12 /14

சுறுசுறுப்பாக செயல்படும் நாள் இன்று. ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் தடைகள் விலகும். மனதில் கவலைகள் குழப்பங்கள் அதிகரிக்கும். வேலையில் இருந்துவந்த நெருக்கடி நீங்கும்.  

13 /14

வர்த்தகம் தொடர்பான சிந்தனைகளால் மனம் மகிழ்ச்சியடையும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நல்லபடியாக முடிவுக்கு வரும். தடைகள் விலகும். பொருளாதார நெருக்கடி குறையும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனதைரியம் அதிகரிக்கும்

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது