இந்த புத்தாண்டின் முதல் பெயர்ச்சியாக  வருகிற ஜனவரி 13 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசிக்கு பெயர்கிரார். ரிஷப ராசிக்கு மாறும் செவ்வாய், மங்கல காரகர். ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் தனது நிலையை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசியிலும் தென்படும். அக்னி கிரகமான செவ்வாய் செவ்வாய், நமது உயிர்ச்சக்தி, உடல் வலிமை, அர்ப்பணிப்பு, ஊக்குவிப்பு, வேலையை செய்யும் ஆற்றல் என நமது வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு உள்ளவர்கள் தைரியமானவர்களாகவும், உத்வேகத்துடனும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். இன்னும் சில நாட்களில்   ரிஷப ராசிக்கு மாறப்போகும் செவ்வாய் பெயர்ச்சி, சில ராசிகளுக்கு அனுகூலமாக இருந்தால், பலருக்கு அனுகூல சத்ருவாக மாறுவார்.  


ரிஷபத்தில் செவ்வாய் யாருக்கு நேர்மறையாக இருக்கும் அல்லது எதிர்மறையாக இருக்கும் என்பதும், வெற்றி கிடைக்குமா? இல்லை தோல்வியா என்பதைத் தெரிந்துக் கொண்டால் அதன்படி செயல்படலாம். எது எப்படியிருந்தாலும் சரி, வாழ்க்கையில் மங்களக்காரகராக திகழும் செவ்வாய், வாழ்வில் வளம் சேர்க்கவும், மங்களகரமானதாகவும் இருக்க உதவும் சில பரிகாரங்களை செய்தால் போதும்.  


செவ்வாயின் அருளைப் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் இவை...


மேலும் படிக்க | இன்னும் 11 நாட்களே..செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்


மேஷம்: பரிகாரம் - தினமும் ஏழு முறை ஹனுமான் சாலிசாவை ஜபிக்கவும்.


ரிஷபம்: பரிகாரம் - அன்னை துர்கைக்கு சிவப்பு நிர மலர்களை சாற்றி அர்ச்சனை செய்யவும்.  


மிதுனம் பரிகாரம் - தினமும் காலையில் முருகப் பெருமானை வழிபடவும்.


கடகம் பரிகாரம் - செவ்வாய் கிழமை அனுமனை வணங்கி லட்டை நைவேத்தியம் செய்யவும்.  


சிம்மம் பரிகாரம்- வலது கையில் ஒரு செம்பால் செய்யப்பட்ட வளையல் அல்லது மோதிரத்தை அணியவும்.  


கன்னி பரிகாரம் - கோவில்களில் வெல்லம் மற்றும் வேர்க்கடலையில் செய்யப்பட்ட இனிப்புகளை நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் பிரசாதமாக வழங்கவும்..


மேலும் படிக்க | ராகு பெயர்ச்சியினால் சிக்கலில் சிக்க போகும் ‘சில’ ராசிகள்!


துலாம் பரிகாரம் - இரத்த தானம் செய்வதும், உடல் உழைப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு வெல்லம் மற்றும் கடலையால் செய்த இனிப்புகளை தானம் செய்யுங்கள்.


விருச்சிகம் பரிகாரம்- செவ்வாய் கிரக பீஜ மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள்.


தனுசு பரிகாரம் - வெல்லம் அல்லது வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகளை தவறாமல் உட்கொள்ளுங்கள்.


மகரம் பரிகாரம்- சிவப்பு நிற ஆடைகளை குழந்தைக்கு தானம் செய்யுங்கள்.


கும்பம் பரிகாரம் - தாய்க்கு மரியாதைக் கொடுக்கவும், அவருக்கும், மற்றவர்களுக்கும் வெல்லம் கலந்த இனிப்புகளை கொடுத்து உண்ணச் சொல்லுங்கள்.


மீனம் பரிகாரம்- ஆலய வழிபாடு அவசியம். குறைந்தது செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள அனுமன் கோவிலுக்குச் செல்லுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தொழில் வியாபாரத்தில் மகத்தான வெற்றி, கனவுகள் நிஜமாகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ