Mars Transit in Gemini: நவகிரகங்களில் முக்கியமானது செவ்வாய், ஆற்றல் மிக்க இந்த கோளின் பெயர்ச்சி பலரின் வாழ்க்கையிலும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் பகவான், தற்போது இருக்கும் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 16 முதல் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் கோள், 15 நாட்களுக்கு சீரான கதியில் இயங்குவார். அதன் பிறகு, அக்டோபர் 30 ஆம் தேதியன்று, செவ்வாய் கிரகம், எதிர் திசையில் நகர்வார். இதில் ஒவ்வொரு ராசிக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படும் சாதக பாதகங்களை விரிவாக தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் பகவான், மிதுன ராசிக்கு மாறுவதால் மிதுன ராசிக்கு ஏற்படும் சாதக பாதகங்களை விரிவாக பார்ப்போம்.


மிதுன ராசிக்கு அக்டோபர் 16ம் தேதி முதல் செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்


மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஆறாம் மற்றும் பதினொன்றாம் வீடுகளை ஆட்சி செய்கிறார் செவ்வாய் பகவான். அக்டோபர் 16 ஆம் தேதி, அவர் தனது சொந்த ராசி, அதாவது உங்கள் முதல் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் முதல் வீட்டின் மூலம் அந்த நபரின் பிறப்பு மற்றும் இயல்பு வெளிப்படுகிறது. தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் மிதுன ராசியினருக்கு, செவ்வாய்ப் பெயர்ச்சி முக்கியமானதாக இருக்கும்.


மேலும் படிக்க | அக்டோபர் 16 செவ்வாய் பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு மத்திமம்! வரவுசெலவு அதிகரிக்கும்


மிதுனத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் போது, ​​உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு பணியையும் முடிக்கும்போது அவசர முடிவுகளை எடுக்காதீர்கள் அல்லது அவசரத்தை வெளிப்படுத்தாதீர்கள்; இல்லையெனில், பெரிய தவறு செய்வதற்கும், அல்லது பிறரின் வார்த்தைகளை வாங்குவதற்கும் தயாராக இருக்க வேண்டும்.


உள்ளார்ந்த ஆர்வம், வைராக்கியம் மற்றும் உந்துதல் ஆகியவற்றை செவ்வாய் பலப்படுத்துவதால், முடிந்தவரை விரைவாக வேலைகளை முடிக்க ஆர்வம் ஏற்படும்.


இது சாதகமானது தானே என்று நினைத்தால், உங்கள் எதிரிகளும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்து, உங்களுக்குத் தீங்கு விளைவிப்பார்கள் என்பது சற்று எச்சரிக்கையையும் தருகிறது. எனவே, உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை எச்சரிக்கையுடன் அணுகுங்கள்.


குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். ஆனால், உடன் பிறந்தவர்களிடம் மனத்தாங்கல் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஏமாற்றமடையலாம்.


காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல்கள் ஏற்படலாம், முடிந்த அளவு பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மாணவர்க்ரளுக்கு மன உறுதி இருக்கும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வாகனம் ஓட்டும்போதும், வெளியில் செல்லும் போதும், பயணங்களின்போதும் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் பெரியவர்களிடம் ஆசி பெறுவது நன்மை பயக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ