Mars Transit in Taurus: கிரகங்களின் முக்கியமான செவ்வாய் ஆற்றல் மிக்க கோள் ஆகும். கிரகங்களின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் பகவான், தற்போது இருக்கும் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 16 முதல் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் கோள், 15 நாட்களுக்கு சீரான கதியில் இயங்குவார். அதன் பிறகு, அக்டோபர் 30 ஆம் தேதியன்று, செவ்வாய் கிரகம், எதிர் திசையில் நகர்வார். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சிகள் இரண்டுமே அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. இதில் ஒவ்வொரு ராசிக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படும் சாதக பாதகங்களை விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் பகவான், மிதுன ராசிக்கு மாறுவதால் ரிஷப ராசிக்கு ஏற்படும் சாதக பாதகங்களை விரிவாக பார்ப்போம்.
ரிஷப ராசிக்கு அக்டோபர் 16ம் தேதி முதல் செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
ரிஷப ராசியின் பன்னிரண்டாம் மற்றும் ஏழாம் வீடுகளுக்கு அதிபதியாக இருக்கிறார் செவ்வாய். அவர், தற்போது இரண்டாவது வீட்டிற்கு சஞ்சாரம் செய்யவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஜாதகத்தின் இரண்டாவது வீடு வேத ஜோதிடத்தில் சேமிப்பு, வாக்கு ஸ்தானம் மற்றும் குடும்பத்தின் வீடு. தற்போது அக்டோபர் 16ம் தேதியன்று நடைபெறவிருக்கும் செவ்வாயின் பெயர்ச்சி ரிஷப ராசியினரின் நிதி வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | அக்டோபர் 16 செவ்வாய் பெயர்ச்சி: மேஷ ராசிக்கு சூப்பர்! பண வரத்தும் கெளரவமும் கூடும்
பண வரத்து அதிகரிக்கும். இதன் விளைவாக, முதலீடு செய்யும் திட்டமும் ஏற்படும். அதுவும் சாதகமாகவே இருக்கும். முந்தைய முதலீடுகளில் இருந்தும் லாபம் கிடைக்கும். எவ்வளவுதான்,நிதி வரவு இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும் என்பதால், சுப செலவை செய்தால் மனதிற்கு ஆசுவாசம் கிடைக்கும்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில், உங்கள் குணத்தில் சற்று மாற்றம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. வார்த்தைகளில் கனம் கூடினால், அது உறவுகளை தூரமாக்கிவிடும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் மற்றும் பணியிடத்தில் பேசும் போது, உங்கள் கருத்தை ஒரு சில வார்த்தைகளில் ரத்தின சுருக்கமாக தெரிவித்தால் போதும்.
தொழில் செய்பவர்களுக்கும், வெளிநாட்டு தொடர்பு இருப்பவர்களுக்கும் இது சாதகமான காலமாக இருக்கும். ஆனால், கடின உழைப்பும் விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும், இல்லாவிட்டால் கைக்கு வந்தது வாய்க்கு வராது.
மேலும் படிக்க | அக்டோபரில் கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்
மாணவர்களுக்கு பெரிதாக நற்பலன்கள் எதையும் சொல்ல முடியவில்லை என்றாலும், பாதகமும் இல்லை. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை மோசமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன, எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அதோடு, தேவையில்லாமல் ஏதேனும் ஆபத்து, விபத்துகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.
இதற்குக் காரணம், உங்கள் எட்டாம் வீட்டை செவ்வாய் பார்க்கிறார். அத்தகைய சூழ்நிலையில், பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். கண்கள் அல்லது இரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்யும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை அதிகம் தேவை. பயணத்தில் பாதுகாப்பாக இருக்க, சுக்கிரனுக்கு பரிகாரம் செய்வது, செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தை ரிஷப ராசியினருக்கு குறைத்துக் கொடுக்கும். நற்பயன்களை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும் .
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ