Akshaya Tritiya Horoscope 2024: அட்சய திருதியை பொதுவாக திருமணம் செய்ய மிகவும் உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்நாளில் திருமணம் செய்வது, தங்கம் மற்றும் வெள்ளி வாங்குதல், புதிய செயல்களைத் தொடங்குவது போன்ற சுப காரியங்கள் சுப நேரம் இல்லாமல் செய்யலாம். ஆனால், அட்சய திருதியை அன்று சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த ஆண்டு திருமணம் வைபோகம் நடத்தக் கூடாது என்பது ஜோதிட ஐதீகமாகும். பொதுவாக அட்சய திருதியையானது சித்திரை மாத வளர்பிறையில் வரும் திரிதியை திதியில் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மே 10 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று காலை 06.33 மணி துவங்கி, மே 11 ஆம் தேதி காலை 04.56 மணி வரை அட்சய திருதியை நிகழயுள்ளது. இந்த நாளில், லட்சுமி தேவியை வணங்கி தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்சய திருதியில் உருவாகும் மங்களகரமான யோகம்:
மறுபுறம் இந்த ஆண்டு நிகழப் போகும் அட்சய திருதியை நாளில் பல மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. குறிப்பாக அட்சய திருதியை நாளில், கஜகேசரி யோகம் மற்றும் தனயோகம் உருவாகிறது, இந்த யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். உண்மையில், அட்சய திருதியை அன்று, மேஷத்தில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடக்கப் போகிறது, இதன் காரணமாக சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இதனுடன் மீனத்தில் செவ்வாயும் புதனும் சேர்க்கையாகப் போவதால் தனயோகமும், மூல திரிகோண ராசியான கும்பத்தில் சனி இருப்பதால் ஷஷ யோகமும், செவ்வாய் உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் மாளவ்ய ராஜயோகமும் உருவாகின்றன. இது தவிர ரிஷப ராசியில் சந்திரனும் குருவும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகி உள்ளது. இப்படி அட்சய திருதியை அன்று பல ராஜயோகங்கள் உருவாகயுள்ளதால் மூன்று ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் போன்றவற்றை தரக்கக்கூடும்.


மேலும் படிக்க | சுக்கிரன் அஸ்தமனம்... நெருக்கடிகளை சந்திக்கும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்!


மேஷம் (Aries Zodiac Sign): அட்சய திருதியை தினமானது மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாகவும், சுபமாகவும் அமையும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். நிலம், வாகனம் போன்றவை வாங்கலாம்.


ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் சிறப்பாக இருக்கும். இந்த 5 ராசி மக்கள் பெரும் நிதி நன்மைகளைப் பெறலாம். அன்னை லட்சுமியின் அருளால், வேலையிலும் அதிர்ஷ்டம் உண்டாகும். பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பளம் உயர்வு கூடலாம். புதிய தொழில் தொடங்கவும், வியாபாரத்தில் லாபம் ஈட்டவும் சிறந்த நேரம். பழைய முதலீடுகளால் லாபம் பெறுவீர்கள்.


மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் சிறப்பான வெற்றியைத் தரும். கடின உழைப்புக்கு ஏற்ப முழு பலன் கிடைக்கும். பணியிடத்தில் உள்ள அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாக அமையும், இதனால் அலுவலகத்தில் வெற்றி அடைவீர்கள். சக ஊழியர்களுடன் நல்ல உறவு இருக்கும். உங்களது இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயம் உங்களுக்கு உண்டாகும்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு வாழ்க்கையில் இனி கொண்டாட்டம் தான்..!


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ