சனி வக்ர பெயர்ச்சி: தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு 12:35 மணிக்கு வக்ர பெயர்ச்சி ஆவார். இந்நிலையில், 139 நாட்களுக்கு வக்ர நிலையில் நீடிப்பார்.
ஜோதிடத்தில், சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதாக விவரிக்கப்படுகிறார். சனிப் பெயர்ச்சி மட்டுமல்ல, அவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களும், ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி வக்ர பெயர்ச்சி: 2024 ஆம் ஆண்டில், சனி பகவான் ஜூன் 30ம் தேதி வக்ர நிலையை அடைந்து, 139 நாட்களுக்கு இந்த நிலையில் இருப்பார். சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்கின்றனர் ஜோதிடர்கள்.
அதிர்ஷ்ட ராசிகள்: சனியின் வக்ர பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு சனியின் வக்ர நிலையினால் பலன்கள் சிறப்பாக இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியினால் அபரிமிதமான செல்வம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம், ஆனால் இது பதவி உயர்வுடன் சேர்ந்து கிடைக்கும். இதனால், வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு இருக்கும்.
துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். சனியின் வக்ர பெயர்ச்சியினால் கைவிட்டு போன செல்வத்தை மீண்டும் பெறலாம். அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் முடிவடையும். வேலையில், வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். சனியின் வக்ர பெயர்ச்சியினால் கைவிட்டு போன செல்வத்தை மீண்டும் பெறலாம். அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் முடிவடையும். வேலையில், வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சனி பரிகாரங்கள்: சனி பகவானின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்க ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்தால், ஆடை, காலணி வழங்குதல் பலன் தரும். கருப்பு நாய், காகம், கருப்பு நிற மாடு என விலங்குகளின் பசியாற்றினால் சனி பகவானின் மனம் குளிரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. Zee News இதற்கு பொறுப்பேற்காது.