புதன் உதயம்: இந்த ராசிகளுக்கு பண வரவு, நல்ல காலம்...இன்பங்கள் உதயமாகும்
Budhan Peyarchi Palangal: மீனத்தில் புதனின் உதயம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் பண வரவு அதிகமாகும்.
Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிபப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். இவற்றில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தனித்துவம் உள்ளது. அந்த கிரகங்களில் மாற்றம் ஏற்படும்போது, மக்கள் வாழ்வில் அந்த தனித்துவமான அம்சங்களில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
கிரகங்களின் இளவரசரான புதன் ஏப்ரல் 19, 2024 அன்று காலை மீன ராசியில் உதயமாகிறார். புதன் கிரகம் புத்திக்கூர்மை, சிந்தனை, கல்வி, அறிவாற்றல், பேச்சாற்றல், சிந்திக்கும் திறன், சிறந்த பகுத்தறிவு திறன் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். மீனத்தில் புதனின் உதயம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் பண வரவு அதிகமாகும். இவர்கள் இந்த காலத்தில் பல வித சாதனைகளை செய்வார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. மேஷம் (Aries)
புதனின் உதயத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கவுள்ளது. இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இவற்றால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
2. சிம்மம் (Leo)
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் பல வித நல்ல செய்திகளை கொண்டு வரும். இந்த நேரத்தில், இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பல நல்ல செய்திகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பல நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
3. கன்னி (Virgo)
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் லாபகரமானதாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். அதனால் நிதி நிலை நன்றாக இருக்கும். பணி இடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்
4. விருச்சிகம் (Scorpio)
மீனத்தில் புதன் உதயத்தால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் மீனத்தில் புதன் உதயமாவதால் அதிகப்படியான லாபம் கிடைக்கும். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
5. கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்காரர்கள் புதன் உதயத்தால் அதிக நன்மை அடைவார்கள். இந்த காலகட்டத்தில், அனைத்து செயல்களிலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பண வரவு மிக அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். கும்பம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | ஏப்ரல் 23 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம்! ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ