Budha Surya Gochar: பொங்கல் நாளன்று ரசி மாறிய சூரிய பகவான் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான அதிர்ஷ்டத்தை வழங்கவுள்ளார்! புத்தாதித்ய ராஜயோகத்தால் அபரிமிதமான செல்வத்தைப் பெற்று நிம்மதியாய் வாழப்போகும் ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா?  ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நிலைகளையும் மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். ஜனவரி 14-ம் தேதி இரவு மகர ராசியில் பிரவேசித்த சூரியன் ஒரு மாதம்  மகர ராசிக்குள் இருக்கும்போது, புதன், சூரியனின் ராசிக்கு பெயர்வதால் புதாதித்ய யோகம் எற்படுகிறது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்களின் அரசர் என்று சொல்லப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசன் புதனும் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்குகிறார்கள். இது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த யோகம், சில ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு முழுவதும் நன்றாக இருக்கும்.


மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!


பிப்ரவரி 7, 2023 அன்று, புதன் மகர ராசியில் சஞ்சரிக்கும் நாளில் இந்த புதாதித்ய யோகம் தொடங்கும். இந்த யோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும்.


தனுசு ராசியில் புத்தாதித்ய ராஜ்யோகம் என்பது கூடுதல் சிறப்பானது. புதாதித்ய ராஜயோகமத்தால், வாழ்க்கையில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் வெற்றியாய் நடைபெறும்.  செல்வம், மரியாதை, சமூக அந்தஸ்து, பதவி உயர்வு, நினைத்த காரியங்களில் வெற்றி என புதாதித்ய ராஜயோகம் அருமையான பலன்களைத் தருகிறது..


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் வாழ்வில் வளங்களை கொண்டு வந்து சேர்க்கும். வாழ்வில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.. வேலையில் மாற்றங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முத்தான காலம் இது. வியாபாரத்தில் லாபம், பணியில் உயர்வு, சம்பளம் அதிகமாவது என நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும். தொழில் செய்பவர்களுக்கு இது அருமையான வாய்ப்புகளை நல்கும் நல்ல காலம். மனதில் நிம்மதியை அதிகரிக்கும் காலம் இது.


மேலும் படிக்க | தனுசில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு 2023 புத்தாண்டின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும்


மிதுனம்: 2023ஆம் ஆண்டில் முதல்முறையாக ஏற்படும் புதாதித்ய ராஜயோகத்தால் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகும் ராசிகளில் முக்கியமானது மிதுன ராசி. குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். பயணங்களால் நன்மை கிடைக்கும்.


கும்பம்: சூரியனும் சென்று இணையும் புதன் ஏற்படுத்தும் புதாதித்ய ராஜயோகம், கும்ப ராசிக்காரர்களுக்கு செல்வ வளத்தை அதிகரிக்கும். நவகிரகங்களில் அரசனுடன், இளவரசனும் இணைந்தால் கிடைக்கும் நற்பலன்கள் கும்பத்திற்கு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கை வசப்படும். ஆசைப்பட விஷயங்கள் அனைத்தும் நடைபெறும்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பொங்கலில் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ