தனுசில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு 2023 புத்தாண்டின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும்

Venus Transit Effects: தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2022, 12:00 PM IST
  • சுக்கிரனின் பெயர்ச்சியால் லக்னாதிபதி யோகம் அமைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் கடாட்சம் கிடைக்கும்.
  • இந்த நேரம் பண வரவின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டமானது.
  • தொழில், வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
தனுசில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு 2023 புத்தாண்டின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் title=

சுக்கிரன் பெயர்ச்சி 2022: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நிலைகளையும் மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். கிரக மாற்றங்களால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். சில ராசிக்காரர்கள் கிரகங்களின் சஞ்சாரத்தால் அனுகூலமான விளைவுகளை பெறுகிறார்கள். சில ராசிக்காரர்கள் இன்னல்களை சந்திக்கிறார்கள். சுக்கிரன் கிரகம், டிசம்பர் 5 ஆம் தேதி தனுசு ராசியில் பிரவேசித்துள்ளது. சுக்கிரனின் சஞ்சாரமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நல்ல பலன்கள் ஏற்படும். 

ஜோதிட சாஸ்திரப்படி, தனுசு ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், லக்ஷ்மிநாராயண யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த யோகம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறப்பான பலனை ஏற்படுத்தி வாழ்வில் மகத்தான வெற்றியைப் பெற உதவும். தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

சிம்மம்:

ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றிகள் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுமட்டுமின்றி, பொருளாதார பலனும் இருப்பதாக தெரிகிறது. இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி: அவதியில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான், பரிகாரங்கள் இதோ 

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் சூழ்நிலை உருவாகும். திருமண வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மேலும் பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும்.

தனுசு:

ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் அதில் லக்கினாதிபதி யோகம் உருவாகிறது. ஏனெனில் புதன் ஏற்கனவே இங்கு அமர்ந்து உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றியின் கட்டம் தொடங்கும். இதுமட்டுமின்றி இந்த காலகட்டத்தில் புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது.

வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இந்த பயணங்கள் அனுகூலமான பலன்களை அள்ளிக்கொடுக்கும். பொருளாதார ஆதாயம் கைகூடும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

கன்னி:

சுக்கிரனின் பெயர்ச்சியால் லக்னாதிபதி யோகம் அமைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் கடாட்சம் கிடைக்கும். இந்த நேரம் பண வரவின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டமானது. தொழில், வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான பலன்கள் உண்டாகும். நீங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமானது. 

பிற முதலீடுகளையும் தற்போது மேற்கொள்ளலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Venus Dosh: பேர் மட்டும் தான் லட்சுமி நாராயண தோஷம்! உஷராக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News