Mercury Rahu conjunction due to Mercury Transit: மீனத்தில் இணையும் புதன் ராகு அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதன், மார்ச் மாதம் ஏழாம் தேதி மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். ராகு ஏற்கனவே மீன ராசியில் உள்ள நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் புதனும் ராகுவும் இணைகிறார்கள். இதற்கு முன்னதாக 2006 ஆம் ஆண்டில் மீன ராசியில் இரு கிரகங்களின் சேர்க்கை உருவானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தில் ராகு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. எப்போதுமே வக்கிர நிலையில் சச்சரிக்கும் ராகு, அறிவாற்றல், வளர்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றுக்கு காரகராக விளங்கும் புதன் உடன் இணைவதால், சில ராசிகளுக்கு இந்த சேர்க்கையினால் செல்வம் பெருகும் வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிட வல்லுநர்கள் கருதுகின்றனர். புதன் ராகு இணைவு எந்தெந்த ராசிகளுக்கு பலனை அள்ளித் தரப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.


புதன் ராகு இணைவதால் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள்


ரிஷப ராசியினருக்கு, புதன் ராகு நினைவு நாள், வேலையில் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். நிதிநிலை வலுவாக இருக்கும். அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்று, உங்கள் வேலை திறனால் கூடுதல் சலுகைகளை பெறுவீர்கள். முதலீடுகள் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பரம் அன்பும் இணக்கமும் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | மார்ச் மாத ராசிபலன் 2024: வருமானத்தை குவிக்க உள்ள 4 ராசிகள்


புதன் ராகு இணைவதால் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்கள்


கடக ராசியினருக்கு புதன் ராகு இணைவு, வேலையில் இருந்து வந்த தடைகள் அனைத்தையும் நீக்கி வளர்ச்சியை கொடுக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு, மனைவியின் அன்பும் ஆதரவும் நிறைய இருக்கும்.


புதன் ராகு இணைவதால் சிம்ம ராசிக்கு கிடைக்கும் பலன்கள்


சிம்ம ராசிகளுக்கு புதன் ராகு சேர்க்கை செல்வத்தை அள்ளித் தருவதோடு, கடன் தொல்லைகளிலிருந்து நீங்கும் வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை வலுவாக இருப்பதால், உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறன் பட நிறைவேற்றுவீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு வாய்ப்பு உண்டு.


புதன் ராகு இணைவதால் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்கள்


விருச்சிக ராசிக்கு புதனின் சம்சாரம் வேலையில் முன்னேற்றத்தை கொடுக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும் மேல் அதிகாரிகளின் கவனத்தை பெறுவீர்கள். நிதிநிலை வலுவாக இருக்கும். உங்கள் திறமையினால் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். எதிர்பாராத பண வரவின் காரணமாக நிதி நிலையில் முன்னேற்றம் காணலாம். ஆடம்பரத்திற்காக பணத்தை செலவழிப்பீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | மார்ச் மாத ராசிபலன் 2024: வருமானத்தை குவிக்க உள்ள 4 ராசிகள்


புதன் ராகு இணைவதால் மீன ராசிக்கு கிடைக்கும் பலன்கள்


மீன ராசியினருக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள் வேலைத் திறன் பாராட்டப்படும். அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எதிரிகளின் சதிகளை முறியடிப்பீர்கள். சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் திறன் இருக்கும். தொழிலில் வருமானம் மகிழ்ச்சியை தரும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் முடிவுகள் எடுப்பீர்கள்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்... மே 1 முதல் பணக்கார யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ