மார்ச் மாத ராசிபலன் 2024: வருமானத்தை குவிக்க உள்ள 4 ராசிகள்

March 2024 Lucky Zodiac Sign : வருகிற மார்ச் மாதம் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் உள்ளிட்ட 4 கிரகங்களின் ராசி மாற்றம் நிகழப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும், மேலும் செல்வம் பெருகும் என்று பார்போம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 21, 2024, 02:34 PM IST
  • தொழிலில் இன்பம் இருக்கும். நிதி நிலை மேம்படும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு ஏற்படும்.
  • உத்தியோகத்தில் வளர்ச்சி அடைந்து வருமானம் பெருகும்.
மார்ச் மாத ராசிபலன் 2024: வருமானத்தை குவிக்க உள்ள 4 ராசிகள் title=

மார்ச் மாத ராசிபலன் 2024: ஜோதிட கணக்கீட்டின்படி, கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. அதிலும் வருகிற மார்ச் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த மாதம், கிரகங்களின் அதிபதியான புதன் கிரகம் வருக்களிர மார்ச் 7 ஆம் தேதி 2024 கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மறுபுறம் மார்ச் 26 ஆம் தேதி புதன் மீண்டும் தனது ராசியை மாற்றி மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதையடுத்து, வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி, செல்வம், செழிப்பை அளிக்கும் சுக்கிரன் கும்ப ராசியிலும், பின்னர் யாவரும் மார்ச் 31 ஆம் தேதி மீன ராசியிலும் பெயர்ச்சி அடைகிறார். அதேபோல் மார்ச் 14 ஆம் தேதி அன்று சூரிய பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைவார். அதன்பின் மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைவார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் சில சுப யோகங்களும் உருவாகப் போகிறது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட 4 பெரிய கிரகங்களின் பெயர்ச்சியால், எந்த ராசிக்காரர்களுக்கு அளவில்லா பலன் கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign) : மாணவர்கள் தேர்வில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த நீண்ட நாட்கள் பணிகள் முழுமையாக நிறைவடையும், வெற்றி பெறும். பொருளாதார நிலையில் உயர்வு இருக்கும். சுப காரியங்களால் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முழுமையாம் முன்னேற்றம் அடைவார்கள். தொழில் பண வரவு உண்டாகும். ஆசிரியர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நல்ல வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் இன்பம் இருக்கும். நிதி நிலை மேம்படும்.

மேலும் படிக்க | குலதெய்வத்தை எப்படி வணங்கினால் வாழ்வில் வளம் பெறலாம்? தெரிந்துக் கொள்ளவேண்டியவை...

கடகம் (Cancer Zodiac Sign) : புதிய வருமானம் வரும். இதனால் நிதி ஆதாயம் உண்டாகும். நீதிமன்ற வழக்கில் உங்களுக்கு ஆதரவாக தீர்வு வரும், வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். பணம், சொத்துக்களால் இருந்து வந்த சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். மன அமைதியும், வாழ்க்கையில் மகிழ்ச்சி போன்றவை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு ஏற்படும். 

கன்னி (Virgo Zodiac Sign) : சமய நிகழ்ச்சிகளில் அதீத ஆர்வம் ஏற்படும். ஆளுங்கட்சியில் இருந்து நீங்கள் ஆதரவைப் பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் மேல்லோங்கும். அலுவலகத்தில் உங்களின் பணியால் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி அடைந்து வருமானம் பெருகும். 

மகரம் (Capricorn Zodiac Sign) : மகர ராசியினரின் காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும், உடல்நலம் மற்றும் நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல்நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்: அதிகம் படுத்தாமல் இவர்கள் மீது அருள் மழை பொழிவார் சனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News