குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்... மே 1 முதல் பணக்கார யோகம்

Guru Peyarchi: சிலருக்கு இந்த பெயர்ச்சி பல வித நற்பலன்களை அள்ளித்தரும். இவர்களுக்கு தொழிலில் விருத்தி ஏற்படும். பண வரவு அதிகமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2024, 01:41 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அள்ளித்தரும்.
  • வேலை தேடிக்கொண்டு இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.
  • வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம்.
குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்... மே 1 முதல் பணக்கார யோகம் title=

Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகளால் சில ராசிகளிக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கின்றன. அனைத்து பெயர்ச்சிகளிலும் சனி பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும் மிக முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. 

குரு பெயர்ச்சி

மிக முக்கிய கிரகங்களில் ஒருவராக கருதப்படும் குரு பகவான் இந்த ஆண்டு தனது ராசியை மாற்றுகிறார். இந்த ஆண்டு நடக்கவுள்ள கிரக பெயர்ச்சிகளில் குரு பெயர்ச்சி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. குரு மே 1 அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அகவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சிலருக்கு இந்த பெயர்ச்சி பல வித நற்பலன்களை அள்ளித்தரும். இவர்களுக்கு தொழிலில் விருத்தி ஏற்படும். பண வரவு அதிகமாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மகிழ்ச்சி அதிகமாகு. அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

குரு பெயர்ச்சியால் பன்மடங்கு மகிழ்ச்சியை பெறவுள்ள ராசிகள் இவைதான்:

மேஷம் (Aries)

குரு பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இது இவர்களது வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம், குழந்தைகள் மற்றும் திருமணம் போன்ற பல அம்சங்களில் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். பல நாட்களாக தடைபட்டு வந்த பல வாய்ப்புகள் இப்போது இவர்க்ளுக்கு கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அருளால் லாபம் அதிகரிக்கும். 

மிதுனம் (Gemini)

குரு பெயர்ச்சியின் நற்பலன்கள் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் உச்சம் தொடுவார்கள். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். உங்கள் மனம் ஆன்மீகத்தில் ஈடுபடும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். மிதுன ராசியினருக்கு வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு அமையும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். 

மேலும் படிக்க | இன்னும் 35 நாட்களே.. உதயமாகும் சனி, இந்த ரசிகளுக்கு சனி அருள் கட்டாயம்

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அள்ளித்தரும். வேலை தேடிக்கொண்டு இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம். இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திடீர் பண வரவு இருக்கும். 

தனுசு(Sagittarius)

குரு பகவானின் அருளால் நீண்ட நாட்களாக இருந்த நிதி சிக்கல்கள் தீரும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் உங்களுக்கு திருப்தியான, மகிழ்ச்சியான சூழல் இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்பின் முழுமையான பலன் இப்போது கிடைக்கும். முதலீடுகளால் லாபம் காண்பீர்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம். பண வரவு... அருள் மழை பொழிவார் அன்னை மகாலட்சுமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1 width="100%">

 

Trending News