சுக்கிரன் ராசி மாற்றம் 2022: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரனின் ராசி மாற்றம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிகழ்கிறது. பொதுவாக சுக்கிரன் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மாறுவது சுபமாகவும், சிலருக்கு வேதனையாகவும் இருக்கும். அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 5:20 மணிக்கு சுக்கிர பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குள் நுழைந்தார். தற்போது ஆகஸ்ட் 31 வரை இந்த ராசியில் சுக்கிரன் நீடிப்பார். அதேபோல் சுக்கிரன் மகிழ்ச்சி, செழுமை, அழகு, பேச்சு, அழகு போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. அந்தவகையில் ஆகஸ்ட் 31 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு என்று தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம் - சுக்கிரனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். வாகனம், கட்டிடம் வாங்கலாம். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் இரகசிய எதிரிகளைத் தவிர்க்க வேண்டும். 



மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!


கன்னி - சுக்கிரன் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்துடன் பண வரவு ஆதாயத்திற்கான அறிகுறிகள் ஏற்படும்.



துலாம்- சுக்கிரன் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம், இருப்பினும் செலவுகள் காரணமாக நீங்கள் சிரமப்படுவீர்கள். நண்பர் அல்லது அன்புக்குரியவரிடமிருந்து நீங்கள் நல்ல செய்தியைப் பெறலாம். கட்டிடம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.



விருச்சிகம் - சுக்கிரன் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களின் தைரியத்தை அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடினமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தை தரப்பில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். 



(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ