Ashtalakshmi Yogam: அஷ்டலஷ்மி யோகத்தால் ஆனந்த வாழ்வு வாழும் ஜாதகர்கள்

Ashtalakshmi Yogam: அஷ்டலஷ்மி யோகத்தால் ஆனந்த வாழ்வு வாழும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். இந்த யோகம் அமையும் ஜாதகம் எப்படி இருக்கும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2022, 05:24 PM IST
  • அஷ்டலஷ்மி யோகத்தால் ஆனந்த வாழ்வு வாழும் பாக்கியம்
  • அஷ்டலஷ்மி யோகம் அமையும் ஜாதகம் எப்படி இருக்கும்?
  • அஷ்டலஷ்மி யோகம் உங்களுக்கு இருக்கிறதா?
Ashtalakshmi Yogam: அஷ்டலஷ்மி யோகத்தால் ஆனந்த வாழ்வு வாழும் ஜாதகர்கள் title=

ஜாதக ரீதியாக ஒவ்வொருவருக்கும் நல்ல நேரமும், சற்று கெடு பலன்கள் வரும் நேரமும் மாறி மாறி வந்துக் கொண்டே இருக்கும். நாளும் கோளும் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், ஒருவரின் வாழ்க்கையில் துன்பமோ அல்லது இன்பமோ நிலையானதாக இருப்பதில்லை.

கிரகங்களின் மாறுதலால் ஏற்படும் மாற்றங்கள், வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தோஷங்களும் யோகங்களும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

தோஷங்களுக்கு பரிகாரங்கள் இருப்பதுபோல, யோகங்கள் ஒருவருக்கு வந்தாலும், ஜாதகத்தில் இருந்தாலும் அதை மேலும் வலுப்படுத்தும் முறைகளையும் ஜோதிடம் சொல்கிறது.

யோகங்களில் முக்கியமானது அஷ்டலக்ஷ்மி யோகம். இது நலம் தரும் யோகங்களில் சிறந்த யோகமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகாத்தில், ராகு ஆறாம் வீட்டில் நின்று குரு லக்ன கேந்திரத்தை அடைவது அஷ்டலக்ஷ்மி யோகம் எனப்படும்.

மேலும் படிக்க | ஆண்களுக்கான மாங்கல்ய தோஷமும் அதற்கான பரிகாரங்களும்

பொதுவாக ராகு, கேது, சனி, சூரியன், செவ்வாய் போன்ற தோஷ கிரகங்கள் ஆறாம் இடத்தில் இருப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ருண ரோக சத்ரு ஸ்தானம் என்றும் அறியப்படும் ஜாதகத்தின் ஆறாவது வீட்டில் நிற்கும் தோஷ கிரகங்கள் அந்த இடத்தை அழிக்கும்.

இந்த நிலையில், எதிர்ப்பே இல்லாத வாழ்க்கையை ஒருவர் அனுபவிப்பார் என்றும், அதையும் மீறி கெடுபலன்கள் வந்தாலும் அவை பாதிப்பை சிறிய அளவிலேயே கொடுக்கும் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அதிலும் குரு பகவான் தனி குருவாக இல்லாமல் கேந்திரத்தில் நிற்பது நல்லது. குரு கேந்திரத்தில் நின்று ராகு ஆறாம் இடத்தில் இருந்தால், அதை அஷ்டலஷ்மி யோகம் என்று சொல்கிறோம்.

மேலும் படிக்க | இன்று குரு பூர்ணிமா; உருவாகும் ராஜ யோகம், யாருக்கு பண மழை

அஷ்டலஷ்மி யோகம் அமைந்தால் புகழ், சொத்து, செல்வாக்கு, செல்வம், நிம்மதியான வாழ்க்கை, சொந்த வீடு, நிலம் என அனைத்து வசதிகளுடன் வாழமுடியும். அஷ்டலஷ்மி யோகம் உள்ளவர்களின் பெயர் பிரபலமாகும். செல்வாக்குமிக்க வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கல.

அரசியல் செல்வாக்கு, மக்கள் தொடர்பு, பிறரை ஈர்க்கும் தன்மை, கவர்ச்சியான தோற்றம் என பல இவர்களுக்கு தானாக வந்து சேரும். ஒருவர் தனது வாழ்நாளில் லக்ஷ்மி பூஜையை தொடர்ந்து கடைபிடித்தால், வாழ்வு வளம் பெறும்.

அதேபோல, தனது ஜாதகத்தில் தடையாக இருக்கும் கிரகங்களின் தோஷங்கள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப தனது வாழ்க்கை முறையை மாற்றி, அதை நடைமுறையில் செயல்படுத்தி வெற்றி பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News