ஜூலை 2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை
Monthly Horoscope for July 2022: ஜூலை மாத ராசிபலன் 2022: ஜூலை மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
Monthly Horoscope for July 2022: ஜூலை மாத ராசிபலன் 2022: ஜூலை மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேஷம் முதல் கடகம் வரை உள்ள ராசிகளின் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மே 2022 மாத ராசி பலன்கள்:
மேஷம்:
உங்களை தொந்தரவு செய்பவர்களிடமிருந்து நீங்கள் விலகிச் செல்வது சந்தர்ப்பம் கிடைக்கும் அதனால், நீண்ட காலம் பொறுமை காத்து வந்த உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது அந்த விஷயங்கள் உங்களுக்காக உதவும். உங்கள் செயலுக்கு பொறுப்பேற்கவும் தயாராக இருப்பீர்கள். சோகமான உள்ளவர்களை ஆறுதல் படுத்தி இதயத்தை எவ்வாறு வெல்வது என்பதை நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள். உங்கள் கடின உழைப்பு இப்போது பலனைத் தரும். வெற்றிக்கான பயணம் எளிதாக இல்லாவிட்டாலும், உங்கள் சுய நம்பிக்கை வெற்றி பெறும். உங்கள் அயராத உழைப்பினால், வாழ்க்கையில் வெற்றிகளை அடைவீர்கள்
ரிஷபம்
இந்த மாதம் முழுவதும் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் வெற்றி பெறும். முக்கியமான ஒன்றைச் செய்ய விரும்பி அட்து வெற்றி பெறும் என்று நீங்கள் நம்பினால், அது நடக்கும். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதை நிறைவேற்ற நீங்கள் தயங்க மாட்டீர்கள். எனினும் கவனமாக முடிவுகளை எடுப்பது நல்லது. நீங்கள் உங்கள் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்துவீர்கள். இது உங்கள் அடையாளம் மற்றும் இயல்பு. வாழ்க்கையில் நீங்கள் விரும்புவதைப் பற்றிய தெளிவான சிந்தனை உங்களிடம் இருக்கும்.
மிதுனம்
தனிப்பட்ட சாதனைகளைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் என்று வரும்போது, உங்களைத் தொடர்ந்து உந்துதல் கிடைக்கும். உங்கள் இதயத்திற்கு நெருக்கமான, மிக விருப்பமான ஒரு திட்டத்தில் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். கடினமாக உழைத்தால் கை மேல் பலன் கிடைப்பது உறுதி. குடும்ப வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும், குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பும் உண்டாகும்.
கடகம்
கடந்த காலத்தை மறந்துவிட்டு புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்த மாதம் உங்களுக்கு தைரியத்தைத் தரும். ஒரு பெரிய மாற்றம் சாத்தியமாகும், அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதன் விளைவாக, உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை தொடர்பாக சில கடினமான முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உங்கள் தலையை உயர்த்தி, தன்னபிக்கையுடன் இருங்கள். நீங்கள் யார் என்பதில் உண்மையாக இருங்கள். வெற்றி உங்களுக்கே. திருமணமானவர்கள் இந்த மாதத்தின் ஆரம்ப நாட்களில் சற்று எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.
மேலும் படிக்க | Astro Remedies: சகல தோஷங்களையும் நீக்கும் சோமவார விரதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR