ராகு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். கிரகங்களின் ராசி மாற்றங்களும், இயக்க மாற்றங்களும், உதய, அஸ்தமன நிலைகளும், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நிழல் கிரகமான ராகு  அக்டோபர் 30-ம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். அப்போது அனைவரது வாழ்விலும் பல வித மாற்றங்கள் நிகழும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். சனிக்குப் பிறகு ராகு மிக மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை ராகு தனது ராசியை மாற்றுகிறார். ராகு எப்போதும் எதிர்திசையில், அதாவது வக்ர இயக்கத்தில் செல்லும் கிரகமாக உள்ளார். தற்போது மேஷ ராசியில் இருக்கும் ராகு, வக்ர பெயர்ச்சி அடைந்து மீன ராசிக்குள் பிரவேசிப்பார்.


ராசிகளில் தாக்கம்


இந்த வருடம் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் பூத்துக்குலுங்கும். இவர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி அடைவார்கள். 


மேஷ ராசி


மேஷ ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் ராகுவின் வக்ர பெயர்ச்சி மிக முக்கியமானதாக இருக்கும். நிதி பிரச்சனைகள் தீரும். இத்துடன் முன்னேற்றப் பாதை திறக்கும். வருமானம் பெருகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். வேலையில் மகத்தான வெற்றியும் கிடைக்கும். ராகுவின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் கூடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.


மேலும் படிக்க | வக்ரமடையும் குரு: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்


ரிஷப ராசி


ரிஷபம் ராசிக்காரர்கள் தங்கள் செயல்களில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். புகழ் அதிகரிக்கும், பயணம் செல்லலாம். இது தவிர வியாபாரத்தில் லாபம் கூடும். தொழிலில் வெற்றி கிடைக்கும்.


கடக ராசி


கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நல்ல பலன் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பல நற்பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். இருப்பினும், இங்கே நீங்கள் பொறுமையையும் கட்டுப்பாட்டையும் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது தவிர, நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த உங்கள் பணிகள் இப்போது முடிவடையும்.  செயல்திறன் நன்றாக இருக்கும், இதனால் பதவி உயர்வுடன் சேர்த்து ஊதிய உயர்வும் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.


துலா ராசி


மீனத்தில் ராகுவின் பெயர்ச்சி துலாம் ராசியினருக்கும் சாதகமாக இருக்கும். புதிய வேலை தேடும் துலா ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டு.


மீன ராசி


மீன ராசியில் ராகு வக்ர பெயர்ச்சி அடைவது மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். செல்வம் சேரும் வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது கிடைக்கும். ஒவ்வொரு இலக்கையும் எளிதாக அடைவீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். பயணங்கள் செல்வதால் அதிக செலவு ஏற்படும். வேலையை மாற்றும் எண்ணத்தில் இருந்தால் அதிக பலன் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.    


மேலும் படிக்க | சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.. ஆடம்பர வாழ்க்கை, அமோக வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ