சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.. ஆடம்பர வாழ்க்கை, அமோக வெற்றி

Venus Retrograde: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்துடனும் நமது வாழ்க்கையின் சில பல அம்சங்களுக்கு தொடர்பு உள்ளது. சுக்கிரன் உலக இன்பம், செல்வம், ஆடம்பரம், காதல், அழகு, ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். 

சுக்கிரன் தனது ராசியை மாற்றும்போதோ அல்லது இயக்கத்தை மாற்றும்போதோ, அது அனைத்து ராசிக்கார்ரகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. தற்போது சுக்கிரன் சிம்மத்தில் இருக்கிறார். அவர் ஜூலை ஜூலை 23 முதல், வக்ர பெயர்ச்சி அடைவார். அவர் ஆகஸ்ட் 7 வரை வக்ர நிலையிலேயே இருப்பார். கடகத்தில் சுக்கிரன் வக்ர நிலையில் இருப்பார். 

 

1 /8

ஒரு கிரகம் தனது வழக்கமான இயக்கத்திலிருந்து மாறி எதிர் திசையில் இயங்கும் நிலையை வக்ர நிலை என்று கூறுகிறோம். அனைத்து கிரகங்களின் வக்ர இயக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

2 /8

சுக்கிரன் வக்ர பெயர்சி: தற்போது சுக்கிரன் சிம்மத்தில் இருக்கிறார். அவர் ஜூலை 23 முதல், வக்ர பெயர்ச்சி அடைவார். அவர் ஆகஸ்ட் 7 வரை வக்ர நிலையிலேயே இருப்பார். 

3 /8

ராசிகளில் தாக்கம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு குறிப்பாக இது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வக்ர நிலை சுக்கிரன்  எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறார் என்பதை இந்த பதிவில் காணலாம். 

4 /8

ரிஷபம்: ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் வக்ர இயக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களைத் தரும். இவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கைகூடும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.

5 /8

சிம்மம்: வக்ர பெயர்ச்சி அடைந்த சுக்கிரன் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக பல நன்மைகளைத் தருவார். நீங்கள் சில பெரிய சாதனைகளை செய்வீர்கள். மூத்தவர்களிடமிருந்து தேவையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனியாக இருப்பவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும்.

6 /8

கன்னி: சுக்கிரனின் வக்ர சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு பெரும் பண பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். முன்னேற புதிய வாய்ப்புகள் அமையும். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். இந்த நேரம் பதவி, பணம், கௌரவம், மகிழ்ச்சி அனைத்தையும் தரும் என்று சொல்லலாம்.  

7 /8

மகரம்: சுக்கிரன் வக்ர இயக்கம் மகர ராசிக்காரர்களுக்கு நிதிப் பலன்களைத் தரும். உங்கள் தொழிலில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய வேலைகளைத் தொடங்கலாம். திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பிர்கள். 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.