ஏழரை சனி, சனி திசையால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் எளிய பரிகாரங்கள்

சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர். ஒரு ராசியில் சஞ்சரிக்கும் சனி அந்த ராசிக்கும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனியாக அமர்ந்திருப்பார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 18, 2023, 05:35 PM IST
  • இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனி, சனி திசையால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • ஏழரை சனி, சனி திசையால் ஏற்படும் மன, உடல், நிதி பிரச்சனைகள் அகலும்.
  • சனி தசையில் இந்த ராசிக்காரர்களுக்கு குபேரன் அருள் நிச்சயம் கிடைக்குமாம்.
ஏழரை சனி, சனி திசையால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் எளிய பரிகாரங்கள் title=

ஏழரை சனி, சனி திசை பாதிப்பில் இருந்து எப்படி தப்பிப்பது? ஏழரை சனி, சனி திசை நமக்கு பல தொல்லைகளை கொடுக்கிறது, அதனால்தான் மக்கள் ஏழரை சனி, சனி திசையின் பெயரைக் கண்டு பயப்படுகிறார்கள். குறிப்பாக சனி ஜாதகத்தில் அசுபமாக இருந்தாலோ அல்லது பூர்வீக செயல்கள் மோசமாக இருந்தாலோ சனி அதிக தொல்லை தருகிறார். எனவேதான் சனிபகவானின் பார்வையில் விசேஷமான இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சனிக்கான பரிகாரங்களைச் செய்ய வேண்டும். சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார். அதேபோல் மனிதர்களுக்கு ஏதாவது ஓரு கால கட்டத்தில் சனி திசை நடக்கும். ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள். இந்த சனி திசை நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும். அந்த வகையில் சனி பெயர்ச்சியால் பாதிப்பு, சனி தசை, புத்தியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபட சனி சாந்தி ஹோமத்திலும், தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்.

இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனி, சனி திசையால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த நேரத்தில், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் சனி திசையால் (சனி திசை நடக்கும் போது ஒருவரின் ஜாதகத்தில் ராசியில்,லக்கினத்தில் சனி இருந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படுவர். வேலையில் வேறு ஊருக்கு இடமாற்றம் உண்டாகும் வாய்ப்புண்டு. இரண்டாவது இடத்தில் சனி இருந்தால் பொருள் நஷ்டம் உண்டாகும் கண் தொடர்பான நோய்கள் வரக்கூடும்.) பாதிக்கப்படுகின்றனர். மறுபுறம் மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்கள் ஏழரை சனியால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த நேரத்தில் சில பரிகாரங்களை மேற்கொண்டு வந்தால் ஏழரை சனி, சனி திசையால் ஏற்படும் மன, உடல், நிதி பிரச்சனைகள் அகலும்.

1.  சனிக் கிழமைகளில் சனியின் காயத்திரி மந்திரத்தை சொல்லுவது, நல்லெண்ணெய் தேய்த்து குளித்து முடித்த பிறகு பூஜை அறைக்கு வந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தியானிப்பது என செய்து வந்தால் நல்லது. 

2. சனிக் கிழமைகளில் எள், நல்லெண்ணெய், இரும்பு ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை தானம் செய்வது அல்லது முடிந்தால் யாரிடம் இருந்தும் இதனை பெறாமல் இருப்பது நல்லது. 

3. காலபைரவர் வழிபாடு சனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை அளிக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மற்றும் அஷ்டமியில் கால பைரவர் வழிபாடு எல்லா சங்கடங்களையும் போக்கும்.

4. முதியவர்கள், ஆதரவற்றவர்கள், வறுமை, கடைநிலை ஊழியர்கள், உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வது மிகச் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தும்.

5. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் இயன்ற அளவுக்கு பணமாகவோ, பொருளாகவோ தானம் செய்யலாம்.  முதியோர்களுக்கு மருந்துகள் வாங்கித் தரலாம் அல்லது அதற்கு பணம் கொடுத்து உதவலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News