சனியின் ராசியில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட், அமோகமான காலம்
Mercury Transit: சில ராசிகளில் புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் அதிகப்படியான ஏற்றத்தை காண்பார்கள்.
புதன் பெயர்ச்சி: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும்போது, 12 ராசிகளின் வாழ்விலும் நேரடி தாக்கம் ஏற்படுகிறது. புதன் கிரகம் புத்திசாலித்தனத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். புதனின் ஆதிக்கம் ஒருவர் மீது இருந்தால், அந்த நபர் அறிவாற்றல் மிக்கவராகவும் புத்திசாலியாகவும் திகழ்கிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அவருக்கு வலுவான அறிவுசார் திறன்கள் இருக்கும் என நம்பப்படுகிறது.
புதன் ஆதிக்கம்
கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் கிரகன் புதன் கிரகம். புதன் கிரகம் ஒருவரது ஜாதகத்தில் சுபமாக இருந்தால் அந்த நபர் அதிக செல்வத்தைப் பெற்று பெரிய தொழிலதிபராக மாறுகிறார். மேலும் அவர் பேச்சு மற்றும் பிறருடன் உறவுகளை பேணுவதிலும் திறமையானவராக இருக்கிறார். புதனின் அருளால் இப்படிப்பட்ட நபர்கள் தங்கள் கனிவான பேச்சாலேயே தங்களுக்கு தேவையானவற்றை நடத்திக்கொள்வார்கள். புதன் ஆதிக்கத்தால் இவர்கள் புத்திசாலிகளாகவும் நல்ல பகுத்தறியும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
புதன் பெயர்ச்சி பலன்கள்:
ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் சனிபகவான் ராசிக்கு அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதத்தில் நுழையப் போகிறார். சனியின் ராசியில் புதனின் பெயர்ச்சி (Budhan Peyarchi) 12 ராசிகளில் சில ராசிகளுக்கு (Zodiac Signs) சாதகமான மற்றும் சில ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். புதனின் இந்த பெயர்ச்சி எப்போது நடக்கும்? இதனால் என்னென்ன தாக்கங்கள் இருக்கும்? இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
சனியின் ராசியில் புதனின் பெயர்ச்சி
2024 பிப்ரவரி 20 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 6.07 மணிக்கு புதன் கும்ப ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறார். புதனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் அதிகப்படியான ஏற்றத்தை காண்பார்கள். இவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதன் பெயர்ச்சியால் நற்பலன்களை அடையவுள்ள ராசிகள்
கும்பம் (Aquarius)
கும்ப ராசியில் புதன் நுழைவதால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். இவர்களின் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். மேலும் வீட்டில் பொருளாதார பிரச்சனைகள் தீரும். தொழிலில் வெற்றி வாய்ப்பு உண்டு. பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் அமையும். வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இது முதலீட்டிற்கு ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மேலும் படிக்க | 50 ஆண்டுக்குப் பிறகு அபூர்வ சேர்க்கை, இந்த 5 ராசிகளுக்கு ராஜயோக வாழ்க்கை
விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் சுப பலன்களைத் தரப்போகிறது. திடீரென்று எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கலாம். மேலும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவர்களுக்கு இப்போது லாபம் கிடைக்கும். பணியிடத்திலும் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அன்பும் மேலோங்கும்.
தனுசு (Scorpio)
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பலன் தரும். இந்த பெயர்ச்சி காரணமாக, மன நிலை மேம்படும். வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தனுசு ராசிக்காரர்கள் தங்களது தொழிலில் திடீர் வெற்றியைப் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்கும் எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை விரைவில் நிறைவேறும். மாணவர்களுக்கு இது சாதமகான நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | ராமரின் அருளை பெறும் இந்த 4 ராசிக்காரர்கள் விஷ்ணுவை வழிபட்டால் வாழ்க்கை அமோகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ