குரு நட்சத்திரத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி.. இன்னும் 20 நாட்களில் இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டும்
Saturn Nakshatra Transit 2024: ஜோதிடத்தில் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் அடிக்கடி நடைபெறும். இந்த மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கு தாக்கம் ஏற்படுத்தும். அதன்படி இன்னும் 20 நாட்களில் குருவின் நட்சத்திரத்திரத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி அடையப் போகிறார்.
Saturn Nakshatra Peyarchi Palangal 2024 : நவகிரகங்களில் நீதியின் கடவுளாக இருப்பவர் சனி பலவான். இவர் நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன் தருவார் என்பது ஜோதிட ஐதீகம். சனி பகவான் நவக்கிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். அதுமட்டுமின்றி சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 07 ஆம் தேதி அதாவது இன்னும் 20 நாட்களில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரம் அதாவது குருவின் அதிபதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் அனைத்து ராசிகளிலுமே இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் ஒரு அளவுக்கு சுபமாகவே தெரியும். எனினும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டம் உண்டாகும், நல்ல பண வரவு, வேலையில் ப்ரமோஷன் போன்றவை உண்டாகும். எனவே சனி நட்சத்திர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் (Saturn Nakshatra Transit) லாபகரமான பலன் கிடைக்கும். அதுமட்டுமின்றி நிதி நிலை மேம்படும், இதனால் உங்களது ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்தியைப் பெறலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். பழைய முதலீடு மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும் மற்றும் அவருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி (Saturn Nakshatra Transit 2024) மிகவும் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வேலை வாய்ப்பை பெறலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வீடு, வாகனம் வாங்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். கூட்டுதொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் மங்கள பலன் உண்டாகும். ஏப்ரல் மாதம் முதல் அதிர்ஷ்டம் பெருகும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். சனி பகவானின் அருளால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் அடையும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ