சனி பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: சூரியனின் மகனான சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப சனி அவர்களுக்கான பலன்களை அளிக்கிறார். சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஒரே ராசியில் அவர் அதிக காலத்திற்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும். சனி பகவானின் ஒரு சிறிய மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேத ஜோதிடத்தின்படி, தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியிலேயே இருப்பார். எனினும், தனது மூல ராசியான கும்ப ராசியில் அவர் உதயமாவார். சனிபகவான் கும்ப ராசியில் இருப்பதால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகி இருக்கிறது. இது ஜோதிடத்தில் மிக சுபமான யோகமாக கருதப்படுகின்றது. 


2025 ஆம் ஆண்டு வரை சனி பகவான் கும்ப ராசியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, கும்ப ராசியில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகும்போது, ​​பலரது வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான கதவுகள் திறக்கத் தொடங்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழுமையுடன், செல்வமும் கிடைக்கும். சனி பகவானால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் பல நல்ல பலன்கள் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்கள் (Zodiac Signs) வெற்றியின் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சனியின் அருளால் 2025 ஆம் ஆண்டு வரை மகிழ்ச்சி மழையில் நனையவுள்ள ராசிகள்


துலாம் (Libra)


வேத ஜோதிடத்தின்படி, சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். மேலும், வாழ்க்கையில் பல வகையான மாற்றங்கள் காணப்படும். மனதில் நேர்மறை எண்ணங்கள் வரும். முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சனியின் அருளால் வரும் நாட்களில் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். 


மேலும் படிக்க | 50 ஆண்டுக்குப் பின் உருவாகும் 3 அபூர்வ ராஜயோகம்.. இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை


மேஷம் (Aries)


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் இனிமையாக இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் திடீரென்று வெற்றி பெறலாம். மேலும் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் இந்த காலத்தில் நிறைவடையும். அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப உறுபினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள்.


சிம்மம் (Leo) 


கும்ப ராசியில் சனிபகவான் இருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும், சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கூடும். இந்த நேரம் தொழிலதிபர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும் என்றாலும், பயப்பட ஒன்றுமில்லை. எல்லாப் பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weekly Horoscope: ஜனவரி 22 முதல் 28 வரை எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ