செவ்வாய் உதயம்: இந்த ராசிகள் நினைத்தது நடக்கும், பண வரவு அதிகமாகும்

Sevvai Udhayam: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இது தவிர, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் இயக்கங்களையும் மாற்றுகின்றன. இது மட்டுமின்றி கிரகங்களின் உதய, அஸ்தமன நிலைகளும் மாற்றம் பெறுகின்றன.

செவ்வாய் கிரகம் ஜனவரி 17 ஆம் தேதி அதிகாலை 4:17 மணிக்கு உதயமானது. பிப்ரவரி 5-ம் தேதி வரை தனுசு ராசியில் செவ்வாய் கிரகம் உதய நிலையில் இருக்கும். மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதியான செவ்வாயின் உதயத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். சில ராசிகளுக்கு இதனால் சுப விளைவுகளும், சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். அனைத்து ராசிகளிலும் செவ்வாயின் உதய நிலையால் என்னென்ன தாக்கங்கள் ஏற்படவுள்ளன என்பதை இந்த பதிவில் காணலாம். 

1 /13

சமய காரியங்களில் ஈடுபட்டு அனுகூலமான காரியங்களை சாதித்து வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற விரும்பினால், இது அதற்கு நல்ல நேரமாக இருக்கும். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தின் தொடக்கத்தில் சில தடைகளை சந்திக்க நேரிடும், ஆனால் பின்னர் நல்ல லாபம் கிடைக்கும்.

2 /13

இந்த நேரத்தில், உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். மேலும் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களாலும் சக ஊழியர்களாலும் வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம் மற்றும் உங்கள் பணிச்சுமையும் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், பணம் சம்பாதிப்பதற்காக உங்கள் வேலையை மாற்றுவது பற்றி நீங்கள் பரிசீலிக்கலாம். 

3 /13

செவ்வாயின் உதயம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் தொழிலில் நன்மைகள் மற்றும் முன்னேற்றங்கள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தொழிலதிபர்கள் லாபம் ஈட்டும் நிலையில் காணப்படுவார்கள், மேலும் தங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். 

4 /13

இந்த நேரத்தில், உங்கள் மனைவியுடனான உங்கள் உறவை வலுவாகும். அனைத்து பணிகளிலும் உங்கள் பெற்றோரின் ஆதரவையும் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், உழைக்கும் மக்கள் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். மேலும் அவர்களின் தொழிலில் ஒருவித நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.   

5 /13

இந்த காலகட்டத்தில், நீங்கள் முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள், மேலும் வாழ்க்கையில் ஆடம்பரங்களையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். செவ்வாய் கிரகம் உதயமானதால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், மேலும் உங்கள் குடும்பத்தின் தேவைகளை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்வீர்கள். தொழிலைப் பற்றி பேசினால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மனதில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் அதிக பணம் சம்பாதிப்பார்கள். 

6 /13

உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் இருக்கும், ஆனால் நீங்கள் தைரியமாக அனைத்து தடைகளையும் கடந்து உங்கள் நிலையை பலப்படுத்துவீர்கள். அன்புக்குரியவர்களுடன் தொடர்பு கொள்வதில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். செவ்வாயின் உச்சம் காரணமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் வந்தாலும், நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோகஸ்தர்களால் பணியில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.   

7 /13

இந்த நேரத்தில், நீங்கள் நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள், உங்கள் சமூக வட்டம் அதிகரிக்கும், இது சமூகத்தில் உங்கள் மரியாதையையும் அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கான உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், நிதி ஆதாயத்திற்கான சுப வாய்ப்புகள் இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது, சேமிப்பும் அதிகமாகும். அதே சமயம் வியாபாரிகள் லாபத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். திருமண மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் மற்றும் உங்கள் பணித்திறன் சிறப்பாக இருக்கும்.   

8 /13

இந்த காலகட்டத்தில், உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம், இதன் காரணமாக மாதாந்திர வரவு செலவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இந்த காலகட்டத்தில் பணத்தை நிர்வகிப்பதற்கும் குடும்பத் தேவைகளைக் கவனிப்பதற்கும் நீங்கள் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் உங்கள் தற்போதைய வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். 

9 /13

இந்த காலகட்டத்தில், நீங்கள் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும், மேலும் அந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் புதிய சொத்து வாங்குவதில் முதலீடு செய்யலாம், அதில் உங்கள் தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் அதிகாரிகளின் அழுத்தத்தை எதிர்கொள்வார்கள், இதனால் அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யத் தவறுவார்கள். இந்த காலகட்டத்தில், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லிணக்கத்தை பேணுவதில் வெற்றி பெறுவீர்கள். 

10 /13

இந்த நேரத்தில், நீங்கள் பல வகையான தடைகளை சந்திக்க நேரிடும். அதன் காரணமாக உங்கள் அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாயின் உதயத்தால் வாழ்வில் சுகபோகங்களும், வசதிகளும் குறைந்து பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் வெளிநாட்டு நிறுவனத்தில் நல்ல சலுகையும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் புதிய சொத்தை வாங்கலாம் அல்லது முதலீடு செய்யலாம்.  

11 /13

இந்த காலகட்டத்தில், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள் இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவுகள் நன்றாக இருக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் வசதியான நிலையில் காணப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாயின் உதயம் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும், தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும்.

12 /13

இந்த நேரத்தில், கடினமாக உழைத்து, நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் தைரியமாக முடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கையில் பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள், அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இருப்பினும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், இதன் காரணமாக அவர்கள் வேலையை மாற்ற திட்டமிடுவார்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். 

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.