ஜோதிடம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஒருவரது ராசியின் அடிப்படையில், அந்த நபரின் இயல்பு மற்றும் ஆளுமை ஆகியவற்றைக் கண்டறிய முடியும். 12 ராசிகளுக்கும் பிரத்யேகமான சில குணங்கள் இருக்கும். அன்பு, சாதுர்யம், பிறருக்கு உதவுக் தன்மை, இரக்கம், ஈகை என ஒவ்வொரு ராசிக்கு ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரப்படி, மூன்று ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளில் மிகவும் தீவிரமாக இருப்பவர்கள். மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் இவர்கள் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணத்தால் இவர்கள் எளிதில் முன்னேற்றம் அடைகிறார்கள். இந்த மூன்று ராசிகள் எவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் பேசுவதில் வல்லவர்கள். இந்த நபர்கள் தங்களைப் பற்றி நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். வாதங்களில், அவர்கள் எதிரில் உள்ளவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வதை யாரேனும் கேட்கவில்லை என்றால், இவர்களுடனான நட்பை முறித்துக் கொள்வதில் சிறிதும் தாமதிக்க மாட்டார்கள். இந்த நபர்களுக்கு, சுய மரியாதை மிக முக்கியமான விஷயம் ஆகும். இவர்கள் தங்கள் இலக்கில் சமரசம் செய்ய மாட்டார்கள். ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால், அதை அடைய அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். இந்த குணங்களால் இவர்கள் எளிதில் வெற்றியும் பெற்று விடுகிறார்கள். 


மேலும் படிக்க | புதன்கிழமை பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் புத்திசாலி பிள்ளைகளை பெறலாம் 


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தலைப்புச் செய்திகளில் இருக்க விரும்புகிறார்கள். இவர்கள் தங்கள் லட்சியத்தை அடையவும், வாழ்வில் முன்னேறவும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர்கள். இவர்களின் ராசிக்கு அதிபதி சூரியன். சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக இருக்கிறார். இவர்களும் அப்படியே இருக்க விரும்புகிறார்கள். 


சிம்ம ராசிக்கார்ரகள் அனைவரையும் வழிநடத்திச் செல்ல விரும்புகிறார்கள். அவர்களின் உரிமைகளில் யாராவது தலையிட்டால், அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களால் எதிரிகளை எளிதில் மன்னிக்க முடியாது. இவர்கள் ஒரு வேலையை செய்ய முடிவெடுத்துவிட்டால், அதை செய்த பின்னரே நிம்மதி அடைவார்கள். 


கன்னி


கன்னி ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளில் மிகவும் தீவிரமானவர்கள். இவர்கள் அனைத்து விஷயங்களிலும் சரியான கணக்கு வழக்கை வைத்திருக்க விரும்புகிறார்கள். இவர்கள் பண விஷயத்தில் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். இவர்கள் நண்பர்களுக்கும் மிகவும் யோசித்தே உதவி செய்கிறார்கள்.  யாரேனும் இவர்களது மனதை புண்படுத்தினால் அவர்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள். 


இவர்கள் நட்பு மற்றும் உறவில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் மரியாதையுடன் சமரசம் செய்து கொள்வதில்லை. தங்களை யாராவது புகழ்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் இருப்பார்கள். தங்கள் திறமையாலும் உழைப்பாலும் வாழ்க்கையில் மகத்தான வெற்றியை இவர்கள் அடைகிறார்கள்.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: உங்க ராசிக்கு சுபமா, தொல்லையா? பரிகாரம் என்ன? இங்கே காணலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ