புதன் பெயர்ச்சி: உங்க ராசிக்கு சுபமா, தொல்லையா? பரிகாரம் என்ன? இங்கே காணலாம்

Mercury Transit: புதனின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் சுப பலன்களையும் சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் அனுபவிக்க உள்ளனர். பதிவில் விரிவாக காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 24, 2022, 12:02 PM IST
  • அதிர்ஷ்டத்தின் ஸ்தானத்தில் மகர ராசியில் புதன் நுழைந்துள்ளார்.
  • இதனால், அதிர்ஷ்டம் அதிகரிக்கும், அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள்.
  • சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இப்போது சற்று நிவாரணம் காண்பீர்கள்.
புதன் பெயர்ச்சி: உங்க ராசிக்கு சுபமா, தொல்லையா? பரிகாரம் என்ன? இங்கே காணலாம் title=

புதன் ராசி மாற்றம், ராசிகளில் அதன் தாக்கம்: ஆகஸ்ட் 21 அன்று புதன் கன்னி ராசியில் நுழைந்துள்ளார். கன்னி ராசியின் அதிபதியான புதன் அதன் சொந்த ராசியில் சஞ்சரிப்பது பல ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. புதனின் ராசி மாற்றமும் ராசிகளில் தாக்கங்களை ஏற்படுத்தும். சிம்ம ராசியில் புதன் நுழைந்துள்ளதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கியுள்ளது. சிலர் கவனமாக இருக்க வேண்டும். புதனின் ராசி மாற்றத்தால் ராசிகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பற்றி தெரிந்துகொள்வோம். 

கன்னி:

புதனின் மாற்றம் லக்ன ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஆரோகியம் மேம்படும், மன உறுதி அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சிந்தனை திறம் மேன்மையடையும். வேலை செய்யும் பாணி மற்றும் திறனில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்துமுடியும். 
 
வேலை செய்வதற்கான விருப்பம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புகழ் ஓங்கும். உடல்நிலை குறித்த கவலைகள் நீங்கும். குடுமபத்தாருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். 

பரிகாரம்: புதன் அஷ்டோட்டாஷத நாமாவளியை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

மேலும் படிக்க | சனியின் 'வக்ர பார்வை' : ராஜ யோகத்தை ருசிக்க போகும் ‘3’ ராசிகள் இவை தான்!

துலாம்: 

இந்த காலகட்டத்தில் துலா ராசிக்காரர்கள் வணிகத்தில் அதிகப்படியான லாபம் காண்பீர்கள். நீண்ட பயணங்கள் செல்லக்கூடும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். வணிக உறவுகளில் வளர்ச்சி ஏற்படும். தந்தையின் ஆதரவு கிட்டும். கல்வி, பட்டப்படிப்புக்கு சாதகமான நேரமாக இது இருக்கும்.

உட்புற நோய்கள் அதிகரிக்கும். சுகாதாரத்தை பேணுவது மிக முக்கியமாகும். எதிரிகளின் தொல்லை இந்த காலத்தில் அதிகரிக்கலாம். எனினும், சாதுர்யமாக நடந்துகொண்டால், அவர்கள் மீது வெற்றி காண்பீர்கள். இந்த காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். சுபச் செலவுகள், பயணச் செலவுகள் நிறைந்த ஒரு காலமாக இது இருக்கும்.

பரிகாரம்: விநாயகர் அகவல் படிப்பது நன்மை தரும். 

விருச்சிகம்:

புதனின் மாற்றம் விருச்சிக ராசியின் எட்டாம் வீடான லாப ஸ்தானத்தில் நடந்துள்ளது. இந்த காலத்தில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

கடின உழைப்பிற்கான பலன் இப்போது முழுமையாக கிடைக்கும். சொத்து மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வணிக விரிவாக்கம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எண்ணத்தில் உள்ளவர்கள் இந்த காலத்தில் அதை செய்யலாம். இந்த காலத்தில் உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு பயன்படும். அதை முறையாக செயல்படுத்தினால், நல்ல பலன்களை பெறுவீர்கள். 

பரிகாரம்: விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

புதனின் ராசி மாற்றம் தனுசு ராசியின் ராஜ ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ளது. உங்களது மகிழ்ச்சி மற்றும் கடமை உணர்ச்சி அதிகரிக்கும். கூட்டாண்மை மூலம் லாபம் காணலாம். செல்வம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். காதல் உறவுகள் மேம்படும். வாழ்க்கை துணையால் நன்மைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: கருமாரியம்மனை வழிபடுவது நன்மை பயக்கும். 

மகரம்:

அதிர்ஷ்டத்தின் ஸ்தானத்தில் மகர ராசியில் புதன் நுழைந்துள்ளார். இதனால், அதிர்ஷ்டம் அதிகரிக்கும், அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இப்போது சற்று நிவாரணம் காண்பீர்கள். நாள்பட்ட நோய்களில் முன்னேற்றம் ஏற்படும். ரகசிய எதிரிகளுக்கு பின்னடைவு கிடைக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். சில குறிப்பிட்ட துறைகளில் இந்த காலத்தில் சாதனை புறிவீர்கள். 

பரிகாரம் : புதன் கவசம் பாராயணம் செய்ய வேண்டும்

கும்பம் :

கும்ப ராசியின் எட்டாம் வீட்டில் புதனின் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி கற்கும் விதம் மேம்படும். பேச்சு வணிகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு நன்மைகள் ஏற்படும். குடும்ப சுபிட்சம் அதிகரிக்கும். 
வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். வணிக விரிவாக்கம் ஏற்படும். சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளைப் பற்றிய சிறு கவலைகள் வந்து பின்னர் சரியாகும். 

பரிகாரம்: புதன்கிழமை பச்சை நிற ஆடைகளை அணியவும்.

மீனம் :

மீன ராசியின் ஏழாம் ஸ்தானத்தின் புதன் கிரக நுழைந்துள்ளது. மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளில் பண வரவு இருக்கும். கூட்டாண்மை மூலம் லாபம் உண்டாகும். கணவன் / மனைவியின் ஆதரவு அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் தற்போது உள்ளது. உட்புற நோய்கள் அதிகரிக்கும். எதிரிகள் வலுவடைவார்கள். எனினும் உங்கள் நற்செயல்களால் அவர்களை வெற்றிகொள்வீர்கள். வியாபாரம் பெருகும், விரிவாக்கம் ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து லாபம் உண்டாகும்

பரிகாரம்: புதன் கவசம், விநாயகர் அகவல் கணபதி அதர்வஷிர்ஷம் ஆகியவற்றை தொடர்ந்து பாராயணம் செய்யவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Sukra Gochar: சுக்கிர பெயர்ச்சியால் 7 நாட்களில் வாழ்வில் வசந்தம்: அனுபவி ராஜா அனுபவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News