புதுடெல்லி: ஜாதகம் என்பது ஒருவரின் எதிர்காலத்தை கணித்து சொல்லிவிடுகிறது. ஒரு குழந்தைக்கு தாயுடனான பிணைப்பு எப்படி இருக்கும் என்பதையும் ஜாதகம் கணிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்க்கும் சேய்க்குமான உறவை சொல்லும் பாவகம் எது என்று தெரியுமா? லக்னத்தில் இருந்து இந்த பாவகத்தில் சந்திரன் இருந்தால் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையாக இருப்பார்கள்


ஜோதிடத்தில் நான்காம் வீடு தாய்க்கு உரியதாகும். கிரகங்களில் சந்திரன் இருக்கும் இடத்தை வைத்து தாயுடான உறவை ஜோதிடர்கள் சொல்லிவிடுவார்கள். பொதுவாக ஜாதகத்தில் நான்காம் அதிபதியும் சந்திரனும் நன்றாக இருக்கும் போது ஜாகதருக்கு அக்கறையுள்ள தாய் இருப்பார்.


தாயுடனான உறவை சந்திரனுடனான சில கிரகங்களின் சேர்க்கை முடிவு செய்யும். 


லக்னாதிபதி 4ஆம் வீட்டில் பலம் பெற்றிருந்தாலும், 4ஆம் அதிபதி லக்னத்தின் அம்சங்களில் நன்றாக இருந்தாலும் தாயுடனான உறவு பிள்ளைக்கு நன்றாக இருக்கும். ஒரு வீட்டில் ஒரு குழந்தை தாய்க்கு நெருக்கமாக இருக்கும்போது, மற்றொரு குழந்தை தாயை கவனிக்காமல் பாராமுகமாக இருப்பதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.


மேலும் படிக்க | இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்ட நாள்


லக்னம் மற்றும் ஜாகத்தில் நான்காம் அதிபதி பரிவர்த்தனை பெறும்போது தாய்க்கும் பிள்ளைக்கும் நல்ல உறவு இருக்கும். வாழ்க்கையிலும் ஒருவருக்கொருவர் நிம்மதி கொடுப்பவர்களாக இருப்பார்கள்.


ஜாககர் ஒருவரின் 11ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்து, அவர்களின் அருட்பார்வை நான்காம் வீட்டின் அதிபதி மற்றும் லக்னாதிபதியின் மீது இருந்தாலும் தாய்-சேய் உறவு நன்றாக இருக்கும். 


வியாழன், சுக்கிரன் மற்றும் புதன் போன்ற ஏதாவது ஒரு கிரகத்தின் சுப பலன்களுடன் சந்திரன் நான்காம் வீட்டில் உச்சம் பெற்றிருந்தால் தாயுடனான உறவு ஜாதகருக்கு நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க | போராட்ட குணம் கொண்ட வல்ல ராசிக்காரர்கள்


ஜாதகம், பிறக்கும் நேரம் என்பவை அனைத்தும் நமது கர்மாக்களின் பலனால் உருவாவது என்பது நம்பிக்கை. மனித வாழ்க்கையில் உள்ள வேறுபாடுகளை நியாயப்படுத்த கர்மாவே காரணமாகிறது.


மனிதனின் தற்போதைய இருப்பு என்பது அவனது முந்தைய பிறப்பின் மறுநிகழ்வு என்று கருதப்படுகிறது, ஒருவரது தற்போதைய இருப்பு கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கிறது. இந்த பின்னணியை வைத்து, நமது பிறப்பு கடந்த காலத்துடன் (தாய்) மற்றும் எதிர்காலத்துடன் (குழந்தைகளுடன்) இணைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Lakshmi Narayana Yogam: லக்ஷ்மி நாராயண யோகத்தினால் காதலில் செல்வாக்கு பெறுபவர்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe