உலகின் மிக உயரமான மசூதிகள்! இஸ்லாமியர்களுக்கு மிகவும் பிடித்தமான தொழுகை இடம்...
Tallest Worship Places : ஆண்களுக்கு மட்டுமே உண்டான மசூதிகள் என மசூதிகளில் பல்வேறு வகை இருந்தாலும், இஸ்லாமின் மிகவும் புனிதமான இடமான பிரார்த்தனைக் கூடங்கள்...
மதங்களை பின்பற்றும் மனிதர்கள், தாங்கள் நம்பும் கடவுளை வணங்க பிரம்மாண்டமான கட்டமைப்புகளை உருவாக்குகிறார்கள்.அது ஆலயம், மசூதி, தேவாலயம், கோவில், மடாலயம் என பல விதங்களான பிரார்த்தனை இடங்களாக இருக்கின்றன. மசூதிகளில் மிகவும் பெரிய மசூதி எங்கு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உருவ வழிபாடு இல்லை என்றாலும், கூட்டுப் பிரார்த்தனை செய்வதற்காக மசூதிகள் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகின்றன. உலகில் உள்ள மசூதிகளில் மிகப் பெரியவை எவை என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
முஸ்லிம்கள் அல்லாவை தொழும் இடம் மசூதி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி தொழுகை இடங்கள் கொண்ட மசூதிகள், ஆண்களுக்கு மட்டுமே உண்டான மசூதிகள் என மசூதிகளில் பல்வேறு வகை இருந்தாலும், இஸ்லாமின் மிகவும் புனிதமான இடமான பிரார்த்தனைக் கூடங்கள்...
மெக்கா நகரம் முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான இடமாகும். அதேசமயம், ஜெருசலேமில் அமைந்துள்ள அல்-அக்ஸா மசூதி, இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் இதுபோன்ற பிரபலமான சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகளைத் தவிர, கட்டுமானத்தால் பிரமிப்பை ஏற்படுத்தும் மசூதிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
உலகின் மிக உயரமான மசூதிகளின் பட்டியல்
ஹாசன் II மசூதி
உலகிலேயே மிக உயரமான மசூதியான ஹாசன் மசூதி மொராக்கோவின் மிகப்பெரிய நகரமான காசாபிளாங்காவில் அமைந்துள்ளது. இதன் கோபுரங்களின் உயரம் 689 அடி என்றால், இதன் பிரம்மாண்டத்தைப் புரிந்துக் கொள்ளலாம். இந்த மசூதி Bouygues என்பவரால் கட்டப்பட்டது. 1993 இல் கட்டப்பட்ட இந்த மசூதியில், 105,000 பேர் தொழுகை நடத்தலாம். 25,000 பேர் மசூதியின் மண்டபத்திற்குள்ளும், 80,000 பேர் மசூதியின் வெளிப்புற மைதானத்திலும் தொழலாம்
சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் மசூதி
நீல மசூதி என்று அழைக்கப்படும் சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜிஸ் ஷா மலேசியாவின் ஷா ஆலம் நகரில் அமைந்துள்ளது. இதுவரை மலேசியாவில் உள்ள மிகப்பெரிய மசூதியும் இதுதான். உலகின் இரண்டாவது உயரமான மசூதி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது. 460 அடி உயரம் கொண்ட இந்த மசூதியை முன்னாள் சுல்தான் அப்துல்அஜிஸ் 1974 இல் கட்டினார்.
மொசல்லா மசூதி
மொசல்லா மசூதி அல்லது கிராண்ட் மொசல்லா மசூதி ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ளது 446 அடி உயரம் கொண்ட இந்த மசூதி உலகின் மூன்றாவது உயரமான மசூதியாகும். மசூதியின் கட்டுமானப் பணிகள் 2006 இல் நிறைவடைந்தன. நல்ல இடவசதி க்கொண்ட மசூதி இது.
அல்-ஃதேஹ் கிராண்ட் மசூதி
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் அல் ஃபதேஹ் கிராண்ட் மசூதி உள்ளது. இது 427 அடி உயரத்துடன் உலகின் நான்காவது உயரமான மசூதி என்ற பெயரைப் பெற்றுள்ளது. 69,965 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதியில் சராசரியாக 7,000 பேர் வசிக்கின்றனர் மற்றும் பஹ்ரைனின் முதல் அரசரான அஹ்மத் அல் ஃபதேஹ் பெயரில் உள்ள மசூதி இது.
புத்ரா மசூதி
புத்ரா மசூதி மலேசியாவின் புத்ராஜெயா நகரில் அமைந்துள்ளது மற்றும் உலகின் ஐந்தாவது உயரமான மசூதியாகும். மசூதியின் கட்டுமானப் பணிகள் 1997 இல் தொடங்கப்பட்டு 1999 இல் நிறைவடைந்தன. இதன் உயரம் தரையில் இருந்து 380 அடி. இந்த மசூதியில் 15,000 பேர் தொழுகை நடத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ