செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...

2024 September Rasipalan : ஆவணியில் இரண்டு வாரங்களும் புரட்டாசி இரு மாதங்களுமாக இருக்கும் செப்டம்பர் மாதத்தில் எந்த ராசிக்கு என்ன விதமான பலன்கள் இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 21, 2024, 06:03 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்
  • சிம்ம ராசியினருக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்
  • மகர ராசியினருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி... title=

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐந்து கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும். இவை அனைத்தின் பலன்களையும் கணக்கிட்டு ஒட்டுமொத்தமாக செப்டம்பர் மாதம் யாருக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம். ஆவணியில் இரண்டு வாரங்களும் புரட்டாசி இரு மாதங்களுமாக இருக்கும் செப்டம்பர் மாதத்தில் எந்த ராசிக்கு என்ன விதமான பலன்கள் இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான செப்டம்பர் மாத ராசிபலன் இது...  மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஏப்ரல் மாதத்திற்கான மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளின் மாதாந்திர ஜாதகத்தை பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சொல்லிக் கொள்வதுபோல இருக்காது. கிரகங்களின் நிலை ஏதேனும் ஒரு சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். உங்கள் மீது குற்றம் குறை சொல்பவர்களால் பிரச்சனை ஏற்படலாம், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்: செப்டம்பர் மாத பிற்பகுதியில் அதாவது சூரியப் பெயர்ச்சிக்குப் பிறகு ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். அதுவரை எதையும் செய்வதற்கு முன்னதாக வெளியில் தகவலை கசியவிட வேண்டாம். பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். இந்த மாதத்தில் புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். சூரியனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இருக்கும். உடல்நலக் கோளாறுகள் நினைத்து இருந்து வந்த கவலைகள் தீரும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கடகம்: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரகங்களின் சஞ்சார மாற்றம் காரணமாக, கடக ராசிக்காரர்கள் பாதிக்கப்படலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.

மேலும் படிக்க | சக்திவேல் தந்த சக்தி! சக்தி வாய்ந்த வேலால் பகையை வேரோடு வேரறுக்கும் முருகன் வழிபாடு!

சிம்மம்: எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. பழைய எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். சிந்தித்து செயல்பட்டால் நல்லது நடக்கும். நல்லெண்ணங்களை விதைத்தால் அது நல்ல பலனைக் கொடுக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். செல்வச் செழிப்புடன் நீண்டகாலம் நிம்மதியாக வாழலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இந்த மாதத்தில் முடிவடையும். 

துலாம்: சூரியன் வரும் செப்டம்பர் 16ஆம் தேதியன்று பரிவர்த்தனை ஆன பிறகு நல்ல காலம் பிறக்கும். பணம் வந்து சேரும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.  

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும். வரும் பிரச்சினைகள் தேவையற்ற பண விரயத்தை ஏற்படுத்தும். விருச்சிக ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனி பரிகார தலங்கள் இருக்க கவலை ஏன்?

தனுசு: டிசம்பர் மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். இந்த மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும், ஆனால் டிசம்பர் 16க்கு முன் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் வரலாம். உடல்நலம் தொடர்பான புகார்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மகரம்: மகரம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும், நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்,  லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். 

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கும்பம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகளும் விலகும்.  

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு செப்டமர் மாதத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், திருமணம் கைகூடும், வீட்டில் நல்ல நிகழ்வுகள் நடந்தேறும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | புரட்டாசி பொறந்தா 4 ராசிகளுக்கு குதூகலம்! செப்டம்பர் கிரகப் பெயர்ச்சியால் உங்களுக்கு ஜாக்பாட்??

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News