கிச்சன் வாஸ்து: சமையலறையில் இவற்றையெல்லாம் சிந்தக்கூடாது.... ஜாக்கிரதை!!
Vastu Tips For Kitchen: சமையலறை என்பது வீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். அங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. சமையலறையில் சில விஷயங்களில் அதிக கவன, செலுத்த வேண்டும்.
Vastu Tips For Kitchen: மனிதர்களாகிய நாம் அனைவரும் நமது வாழ்வில் பல இன்பங்களையும் பல வித துன்பங்களையும் அனுபவிக்கிறோம். நாம் சந்திக்கும் பல பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. ஆனால், ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு என்ற ஒன்றும் இருக்கும். இப்படிப்பட்ட பல பிரச்சனைகளுக்கான தீர்வு வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சில தீர்வுகள் உள்ளன. அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் சில வாஸ்து விதிகளைப் பின்பற்றினால் பல வித பிரச்சனைகளைத் தடுக்கலாம். இந்த விதிகளைப் பின்பற்றாதவர்கள் வாஸ்து குறைபாடுகளால் பாதிக்கப்படலாம். இதனால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆரோக்கியம் நேரடியாக பாதிக்கப்படலாம்.
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு பண்டைய இந்திய விஞ்ஞானமாகும். இந்த சாஸ்திரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் வழங்க, திசைகள் மற்றும் ஆற்றல்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு இடமும் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திரம் நம்புகிறது.
சமையலறை (Kitchen) என்பது வீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். அங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. சமையலறையில் சில விஷயங்களில் அதிக கவன, செலுத்த வேண்டும். பொதுவாக நமது சமையறைகளில் நாம் பணிபுரியும் போது பல விஷயங்கள் கீழே விழுவதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இப்படி நடப்பது மிகவும் சாதாரணமானது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில், சில விஷயங்கள் விழுவது அசுபமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது எதிர்மறை ஆற்றல் மற்றும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாக இருக்கலாம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சில பொருட்கள் விழுந்தால், அது நமது வருமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.
சமையறையில் எந்த பொருட்கள் கீழே விழுவது நல்லதல்ல? எவற்றை நாம் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்? இந்த தகவல்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நல்லெண்ணெய் சிந்துதல்
பெரும்பாலான மக்கள் நல்லெண்ணெய் (Sesame Oil) கொண்டு சமையல் செய்கிறார்கள். மேலும், பூஜை அறைகளில் விளக்கேற்றவும் இது பயன்படுத்தப்படுகின்றது. அடிக்கடி நாம் இதை பயன்படுத்துவதால் இது கீழே சிந்துவது அடிக்கடி நடக்கும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, நல்லெண்ணெய் சிந்துவது அசுப பலன்களின் அறிகுறியாக கருதப்படுகின்றது. நல்லெண்ணெய் சனி கிரகத்தை குறிக்கிறது. இந்து மதத்தில், நல்லெண்ணெய் சனி பகவானுடன் தொடர்புடையது. ஆகையால், நல்லெண்ணெய் அவ்வப்போது கீழே சிந்தினால், அது நல்ல அறிகுறியாக கருதப்படுவதில்லை. இப்படி நடப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் சனி தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கொதிக்கும் போது பால் சிந்துவது
சிறுவயதில் இருந்தே நம் வீடுகளில் தாய்மார்கள் ஏதாவது வேலை செய்யும் போது சமையலறையில் பால் (Milk) வைப்பதையும், சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்க மறந்து, பால் பொங்கி கீழே சிந்துவதையும் நாம் பார்த்திருப்போம். ஆகையால், சமையலறையில் பால் காய்ச்சும்போது அது பொங்கி வழிவது மிகவும் பொதுவானது என்று சொன்னால் தவறில்லை. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது வீட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அறிகுறி என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஜோதிடத்தின் படி, பால் சந்திரன் கிரகத்துடன் தொடர்புடையது. எனவே, உங்கள் சமையலறையில் பால் அடிக்கடி பொங்கினாலோ, கீழே சிந்தினாலோ, அது உங்கள் ஜாதகத்தில் சந்திரனின் பலவீனத்தைக் குறிக்கிறது. பால் பொங்கி கீழே சிந்தாமல் இருக்க பால் காய்ச்சும் பாத்திரத்தில் ஒரு கரண்டியை போட்டு வைப்பது சிறந்த வழியாக இருக்கும்.
உப்பு கீழே சிந்துவது
உலகில் உப்பு (Salt) பயன்படுத்தாத எந்த சமையலறையும் இருக்காது. அனைத்து சமையறைகளிலும் கண்டிப்பாக உப்பு இருக்கும். இதை பல்வேறு உணவுகளை சமைக்க நாம் பயன்படுத்துகிறோம். இதன் பயன்பாடு அதிகமாக இருப்பதால், இது கீழே சிந்துவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, உப்பு என்பது சந்திரன் மற்றும் சுக்கிரனின் பிரதிநிதித்துவமாக கருதப்படுகிறது. எனவே, சமையலறையில் உப்பு அடிக்கடி சிந்தினால், உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் என்று அர்த்தம்.
மேலும் படிக்க | குரு உதயம்: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... வாழ்க்கை டாப் கிளாசாக இருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ