Maha Lakshmi Yoga: இந்து மத நூல்களில், மகா லட்சுமியை மகிழ்விக்கவும், முறைப்படி வழிபடவும் பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில், அந்த நபரின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவற்றை நாம் அறிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி, ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்து, வாழ்க்கையில் தன யோகம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியலாம். சில ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி தேவியின் சிறப்பு ஆசீர்வாதங்கள் இருக்கும். இவர்களுக்கு அபரிமிதமான செல்வமும் செழிப்பும் கிடைக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.


இந்த ராசிக்காரர்கள் லக்ஷ்மி தேவிக்கு பிரியமானவர்கள்


ரிஷபம்


ஜோதிடத்தின் படி, மகாலக்ஷ்மி குறிப்பாக ரிஷப ராசிக்காரர்களிடம் கருணை காட்டுகிறார். இதனால், இவர்கள் வாழ்வில் எல்லா மகிழ்ச்சியையும் பெறுகிறார்கள். வீட்டில் எப்போதும் பணத் தட்டுப்பாடு இருக்காது. இந்த ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மட்டுமல்ல, கடின உழைப்பாளிகளும் கூட. கடின உழைப்பால் வாழ்க்கையில் உயர் பதவியை அடைவார்கள். இவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமிருக்காது. 


மேலும் படிக்க | Budh Asta 2023: வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்படலாம்... இந்த 4 ராசியினருக்கு ரொம்ப ரொம்ப கவனம்!


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கும் மகாலஷ்மியின் ஆசிகள் உள்ளது. மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றும் சொல்லலாம். செல்வத்தின் தெய்வத்தால், அவர்கள் மகத்தான செல்வத்தைப் பெறுகிறார்கள். அவர்களின் வாழ்நாளில் பணத்துக்குப் பஞ்சமிருக்காது. இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் மகிழ்ச்சியானவர்கள். இதன் காரணமாக, அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.


சிம்மம்


ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு லட்சுமியின் அருள் பொழியும். செல்வத்தின் தெய்வத்தால், அவர்கள் அபரிமிதமான செல்வத்தையும் சொத்துக்களையும் பெறுகிறார்கள். அதனால்தான் அரசர்களைப் போல் வாழ்கிறார்கள்.


மீனம்


மீன ராசிக்காரர்களின் தெய்வம் ஹரி  பகவான். மேலும் ராசியின் அதிபதி தேவகுரு வியாழன் ஆவார். இதனாலேயே இந்த ராசிக்காரர்களுக்கு நாராயணர் மட்டுமின்றி, செல்வத்தின் அதிதேவதையான லட்சுமி தேவியின் ஆசீர்வாதமும் பொழிகிறது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், அதனால்தான் அவர்களின் வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சமிருக்காது. 


மேலும் படிக்க | புதன் அஸ்தமனத்தால் உருவான அபூர்வ ராஜயோகம்: இந்த ராசிகளளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ