அட்சய திருதியை அன்று உங்கள் ராசிப்படி என்ன வாங்கலாம்?
Akshaya Tritiya 2023: அட்சய திருதியை 2023 ஏப்ரல் 22 அன்று (நாளை) கொண்டாடப்படும். இந்த நாளில் நாளில் தங்கம் வாங்குவது மட்டுமில்லை, நெல், அரிசி போன்றவையும் வாங்கிகொள்ளலாம். ஆனால் ஜோதிடத்தின் படி, உங்கள் ராசிக்கு படி என்ன பொருள் வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
அட்சய திருதியை 2023 தேதி: இந்த ஆண்டு, அட்சய திருதியை நாளை அதாவது ஏப்ரல் 22 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஹிந்து தர்மத்தில் அட்சய திருதியைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பொதுவாக நாள் நட்சத்திரம் பார்க்காமல் அட்சய திருதியை நாளில் சுப காரியங்களை செய்யலாம் என்பது ஐதீகம். இந்நாளில் லட்சுமி தேவியையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் மனமகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாவிட்டால், அந்த நாளில் உங்கள் ராசிக்கு ஏற்றவாறு மற்ற உலோகங்களை வாங்கலாம். எனவே அட்சய திருதியை அன்று எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ராசியின்படி உங்கள் உலோகத்தை வாங்கவும்
மிதுனம் மற்றும் கன்னி ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று (Akshaya Tritiya 2023) வெண்கல நகைகளை வாங்க வேண்டும். இவற்றில் தட்டு, லோட்டா போன்ற பாத்திரங்கள் அடங்கும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழில்-வியாபாரம் பெருகும்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: மீனம், கும்ப ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்டம்... மகரத்துக்கு சோகம்..!
மகர ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை தினத்தன்று தங்கத்திற்கு பதிலாக இரும்பு பாத்திரங்கள் அல்லது இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனின் அருளைப் பெற்று மன அமைதி பெறுவீர்கள்.
ரிஷபம் மற்றும் கடக ராசி: இந்த இரண்டு ராசிக்காரர்களும் 2023 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்குவது நல்லது. இதைச் செய்வதன் மூலம், பணியிடத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தனுசு மற்றும் மீன ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கலாம். இதைச் செய்வதன் மூலம், அவர்களின் தடைபட்ட வேலைகள் நிறைவேறும்.
விருச்சிக ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று தங்கத்திற்கு பதிலாக தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது நல்லது. இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் உண்டாகும்.
மேஷம் மற்றும் சிம்ம ராசி: 2023 அட்சய திருதியை அன்று, இந்த இரண்டு ராசிக்காரர்கள் தங்கம் மற்றும் செம்பு வாங்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார், இதனால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.. வீட்டில் மகிழ்ச்சியும் நிலவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ