புதுடெல்லி: சனீஸ்வரரின் கோபப் பார்வையில் இருந்து நெற்றிக்கண் கொண்ட சிவனே தப்ப முடியாது என்பது ஆச்சரியமான விஷயம். பொதுவாக, நவகிரகங்கள், சிவ பெருமானுக்கு அடங்கியவை என்று சொல்வார்கள். ஆனால், சிவனையும் பீடிக்கும் அதிகாரம் படைத்தவர் சனீஸ்வரர் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். சனி தேவரின் பார்வையில் இருந்து சங்கரரால் கூட தப்ப முடியவில்லை. ஈஸ்வரன் மீது சனிதேவரின் துர்பார்வை விழுந்தபோது என்ன நடந்தது?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதியின் கடவுளாகக் கருதப்படுபவர் சனீஸ்வரர். அவரின் கடுமையான காலம் என்பது, மரணத்தை விட்ட கொடுமையானது என்றே சொல்லலாம். சனி தேவன், சிவன் மீது கோபம் கொண்டால், சிவபெருமான் மட்டும் சும்மா இருப்பாரா? சிவனின் திருவிளையாடல்களில் ஒன்றா இந்த சம்பவம்? புராணத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்.  


போலேநாத் பகவான் மீது சனிதேவின் கோபப்பார்வை பற்றி ஒரு புராணக் கதை உள்ளது. ஒருமுறை சனி தேவர், தனது அபிமான தெய்வமான  ஈஸ்வரரை தரிசனம் செய்வதற்காக கைலாச மலைக்கு சென்றார். கைலாசத்தில் இருந்த சிவனை வணங்கிய சனீஸ்வரருக்கு, ஈஸவரரின் ஆசீர்வாதமும் கிடைத்தது. 


மேலும் படிக்க | காதல் கனியவில்லையா? செவ்வாய் தோஷமாக இருக்கலாம்! பரிகாரங்கள் இதோ


கடவுளை வணங்கி முதலில் அவரிடம் ஆசி பெற்ற சனிதேவர், பிறகு தனது விண்ணப்பத்தை எடுத்துரைத்தார். நாளை தனது வக்ர பார்வை சிவன் மீது விழப்போகிறது என்பதை அவர் கூப்பிய கைகளுடன் சங்கரனுக்கு தெரிவித்தார். 


சனீஸ்வரரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியமடைந்த முக்கண்ணன், சனி தேவனின் பார்வை எவ்வளவு காலம் தன் மீது இருக்கும் என்று கேட்டார்.


ஏழரை நிமிடங்கள் என்று சனீஸ்வரன் சொன்னதைக் கேட்ட சிவன்,  கைலாச மலையிலிருந்து பூமிக்கு வந்தார். சனி தன்னை பிடிக்கக்கூடாது என்பதற்காக யானை வடிவம் எடுத்தார். குறிப்பிட்ட சமயம் முடிந்த பிறகு, சிவன், தனது சுயரூபத்தை அடைந்தார். தனது அசல் ரூபத்திற்கு வந்த சிவன், மீண்டும் கைலாச மலைக்குத் திரும்பினார். 


மேலும் படிக்க | துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் '3' ராசிகள்!


அங்கு காத்திருந்த சனிதேவனைப் பார்த்த சிவன், உனது துர்பார்வை என்னைப் பாதிக்கவில்லை பார்த்தாயா என்று கூறினார். இதற்கு பதிலளித்த சனிதேவன், இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு, எனது துர்பார்வையால் தான், கடவுளாகிய நீங்கள், யானையாக வாழ வேண்டிய நிலை உருவானது என்று கூறினார்.


இதைக் கேட்ட சிவபெருமான், சிரித்துக் கொண்டே சனி தேவருக்கு ஆசி வழங்கி, ‘நீ ஈஸ்வரனையே பிடித்த சனி, என்பதால், உனக்கு சனீஸ்வரன் என்று பெயர்’ என ஈஸ்வரப் பட்டம் கொடுத்தார்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ