இளவரசன் கன்னிக்கு சென்றால் கன்னியருக்கு கொண்டாட்டம் தான்! காதலில் மூழ்கப்போகும் ராசிகள்...
Budh Peyarhi In krodhi Purattasi : குரோதி ஆண்டின் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்கு பெயரவிருக்கும் புதனின் சஞ்சார மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் பெரிய அளவில் மாற்றத்தைக் கொடுத்தாலும், காதலில் உல்லாசமாகும் ராசிகள் 5 மட்டுமே...
வானில் இயங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்கள் பார்ப்பதற்கு அழகாக தோன்றினாலும், அவை பூமியின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதேபோல, நவகிரகங்களின் இயக்கம், இயக்க மாற்றம், ராசி பெயர்ச்சி, சஞ்சார மாற்றம் என கிரகங்களின் ஒரு சிறு நகர்வும் மனிதர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சிம்மத்தில் இருந்து கன்னிக்கு சூரியன் பெயர்ச்சி ஆன நிலையில், சூரியனைத் தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் புதனும் கன்னி ராசிக்கு செல்வதால், பலரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். அதில், கன்னியில் புதனின் சஞ்சாரம், காதலர்களுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால், எல்லா காதலர்களுக்கும் அல்ல, ஐந்து ராசியை சேர்ந்த காதலர்களுக்கு புதனின் கன்னி ராசி பெயர்ச்சியானது மனதில் உல்லாசத்தை ஏற்படுத்தும்.
அதிலும் காதலர்கள் அல்லது தம்பதிகள் இருவருமே, இந்த ஐந்து ராசிகளில் ஒன்றை சேர்ந்தவர்களாக இருந்துவிட்டால் பலன் இரட்டிப்பு தான். காதல் கைகூடும், மனதில் உல்லாசமும், உடலில் உற்சாகமும் பரவசமும் குடிகொண்டு உலகையே வென்றது போல காதல் மன்னர்களாக வலம் வருவார்கள்.
சிம்மம் (Leo Zodiac Sign) - புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகவிருக்கும் புதாதித்ய யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு காதலில் ஜெயிக்கும் வாய்ப்பை தரும். அன்னை லட்சுமி தேவியின் ஆசிகளுடன், ரதி-மன்மதனின் ஆசியும் கிடைத்தது போல காதலில் டூயட் பாடுவார்கள். மனம் மகிச்சியாக இருக்க புதனின் பெயர்ச்சி காரணமாக இருக்கும்.
கன்னி (Virgo Zodiac Sign) - புதாதித்ய யோகத்தால், கன்னியில் சஞ்சரிக்கும் சூரியனும் புதனும் சேர்ந்து, காதலில் வெற்றியை கொடுப்பார்கள். கன்னி ராசியினருக்கு நிதி ஆதாயம் உண்டாகும். சில சுப செலவுகளும் ஏற்படலாம். காதலுக்கு மரியாதை மட்டுமல்ல, செலவும் செய்ய தயக்கமாட்டார்கள் கன்னி ராசியினர்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign) - கன்னியில் சஞ்சரிக்கும் புதன், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அருளை அள்ளித் தரும் என்றால் அது உண்மை தான். காத்லைத் தவிர, புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகத்தையும் கொடுக்கும்.
தனுசு (Sagittarius Zodiac Sign) - புதாதித்ய யோகம் கன்னி ராசியில் உருவாவதால், தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலையை மேம்படும், குடும்ப வாழ்க்கை இனிக்கும், காதல் வாழ்க்கை கற்கண்டாக மாறும். வாழ்க்கையில் இன்பங்கள் பெருகும்.
மீனம் (Pisces Zodiac Sign) - கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புதனின் சஞ்சாரத்தால், மீன ராசியினரின் மனதில் மகிழ்ச்சி பொங்கும். காதல், கல்யாணமாக கைகூடி வரும் காலம் இது. வாழ்க்கையில் இதுவரை இல்லாத மகிழ்ச்சி இப்போது வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ