புதன் வக்ர பெயர்ச்சி டிசம்பர் 2022: வேத ஜோதிடத்தில், புதனுக்கு கிரகங்களின் இளவரசன் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு இளம் கிரகம். புதனின் அருளைப் பெறும் ராசிக்காரர்கள் தர்க்க சக்தி, எழுத்து மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுகிறார்கள். புதனின் அருளால் ஒருவர் வெற்றிகரமான எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் மாறுகிறார். வியாழனுக்குச் சொந்தமான தனுசு ராசியில் புதன் டிசம்பர் 31-ம் தேதி வக்ர நிலையில் நுழைவார். ஜனவரி 18, 2023-ல் அவர் இயல்பு நிலைக்கு மாறுவார். பின்னர் பிப்ரவரி 7-ம் தேதி மகர ராசிக்குள் நுழைவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதனின் வக்ர நிலையில் அவர் 3 ராசிக்காரர்களுக்கு சில தொந்தரவுகளை கொடுப்பார். பொதுவாக அனைத்து கிரகங்களின் வக்ர பெயர்ச்சியும் அனைத்து ராசிகளுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புதனின் வக்ர நிலையும் சில ராசிகளை படுத்தவுள்ளது. அந்த ராசிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். 


ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் இரண்டாம் மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியாக உள்ளார். தனுசு ராசியில் புதனின் வக்ர பெயர்ச்சி உங்கள் எட்டாவது வீட்டின் வழியாக இருக்கும். இந்த ஸ்தானம் தற்செயலான நிகழ்வுகளுக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. இந்த வீட்டில் அமர்ந்து புதனின் ஏழாம் பார்வை உங்கள் செல்வச் செழிப்பின் மீது படும். 


இந்த புதன் சஞ்சாரத்தால் உங்கள் பேச்சில் கசப்பு இருக்கலாம். இந்த நேரத்தில் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். எந்த விதமான குடும்பச் சண்டையிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஊடகம் மற்றும் எழுத்துத்துறை சார்ந்தவர்கள் இந்த நேரத்தில் எதிரிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Venus Transit: சுக்கிரப் பெயர்ச்சியால் செல்வாக்கு மழையில் நனையும் ராசிக்காரர்கள் 


விருச்சிகம்:


இந்த ராசிக்காரர்களுக்கு எட்டு மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியாக புதன் உள்ளார். தனுசு ராசியில் புதனின் வக்ர பெயர்ச்சி உங்கள் செல்வ ஸ்தானத்தில் ஏற்படும். இந்த ஸ்தானம் ராசிக்காரரின் குடும்பம், பேச்சாற்றல் மற்றும் திரட்டப்பட்ட செல்வம் ஆகியவற்றை குறிக்கின்றது. இந்த வீட்டில் அமரும் புதனின் பார்வை உங்கள் எட்டாம் வீட்டில் இருக்கும். 


இந்த புதனின் சஞ்சாரத்தால் வணிக வர்க்கத்தினர் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் வேறு யாருக்காவது பணம் கொடுத்திருந்தால் அது திரும்ப வருவதில் தாமதம் ஏற்படலாம். நண்பர்களின் உதவி கிடைக்காமல் மனம் வருந்தலாம். உறவினர்களுடன் பணம் தொடர்பான பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள்.


மீனம்:


மீன ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாக உள்ளார் புதன். தனுசு ராசியில் புதனின் வக்ர பெயர்ச்சி உங்கள் பத்தாவது ஸ்தானத்தின் வழியாக நடக்கும். பத்தாவது ஸ்தானம், வேலை செய்யும் இடத்திற்கான ஸ்தானமாகும். இந்த வீட்டில் புதன் அமர்ந்து உங்கள் நான்காம் ஸ்தானத்தை பார்வையிடுவார். 


இந்த வக்ர பெயர்ச்சி காரணமாக, பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம். நிதி சம்பந்தப்பட்ட நபர்களின் பணிகளில் தடைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் திருமண வாழ்க்கையில் சில பதட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த புதன் சஞ்சாரத்தின் போது தாயின் உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.


மேலும் படிக்க | தனுசு ராசியில் வீற்றிருக்கும் சூரியனால் ‘6’ ராசிகளின் காட்டில் மழை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ