தனுசு ராசியில் வீற்றிருக்கும் சூரியனால் ‘6’ ராசிகளின் காட்டில் மழை!

சூரியன் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறது. டிசம்பர் 16 அன்று சூரியன் விருச்சிக ராசியிலிருந்து விலகி தனுசு ராசியில் பிரவேசித்துள்ளார். மேலும் ஜனவரி 16, 2023 வரை, அவர் தனுசு ராசியில் இருக்கப் போகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 17, 2022, 11:05 AM IST
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • சூரியன் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறது.
  • முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு நல்ல வருமானம் இருக்கும்.
தனுசு ராசியில் வீற்றிருக்கும்  சூரியனால் ‘6’ ராசிகளின் காட்டில் மழை! title=

சூரியன் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறது. டிசம்பர் 16 அன்று சூரியன் விருச்சிக ராசியிலிருந்து விலகி தனுசு ராசியில் பிரவேசித்துள்ளார். மேலும் ஜனவரி 16, 2023 வரை, அவர் தனுசு ராசியில் இருக்கப் போகிறார். சூரியனின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் அசுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். எனினும் இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

கும்பம்

சூரியன் பெயர்ச்சி காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பயணத்தின் மூலம் சிறப்புப் பலன்களைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு நல்ல வருமானம் இருக்கும். இந்த நேரம் மிகவும் சாதகமானது, எனவே நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு 

தனுசு

டிசம்பர் 16ம் தேதி சூரியன் இந்த ராசியில் நுழைந்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அலுவலகம் மற்றும் பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். அலுவலகத்தில் ஒரு திட்டத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில், தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது எனலாம். உங்கள் ராசிக்குள் சூரியனின் பிரவேசம் உங்கள் காதல் வாழ்க்கையையும் சிறப்பாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க | Ketu Gochar 2023: கேது பெயர்ச்சியால் புத்தாண்டில் ஆனந்தத்தை அனுபவிக்கப்போகும் '4' ராசிகள்

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். இதன் போது பெரியவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அதுமட்டுமின்றி, பெரியவர்களின் அறிவுரைகளும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தாய் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். இல்லற வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல பலன் இருக்கும். இந்த காலகட்டத்தில் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். இந்த நேரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இதை பார்த்து சிலருக்கு பொறாமை வரலாம், ஆனால் நீங்கள் உங்கள் வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். பெயரும் புகழும் நிச்சயம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த நேரத்தில் நிதி நிலைமையில் நிறைய மாற்றம் இருக்கும். மறுபுறம், ஜோதிடத்தின் படி, நீங்கள் எங்காவது முதலீடு செய்திருந்தால், இந்த காலகட்டத்தில் சிறப்பு பலன்கள் இருக்கலாம். சொத்து சம்பந்தமான பலன்களையும் காணலாம். பொது வாழ்வில் தொடர்புடையவர்கள் பெயரும் புகழும் பெறலாம். இந்த நேரத்தில், சரியான திசையில் வேலை செய்யுங்கள். இந்த நேரம் சுப பலன்களை தரப்போகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2023 ஆண்டில் இவங்கள அசச்சிக்க முடியாது: புத்தாண்டின் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News