சனி வக்கிர பெயர்ச்சி பலன் 2022: ஜோதிடத்தின்படி சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு வர இரண்டரை வருடங்கள் ஆகும். சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம் என்று கூறப்படுகிறது. அனைத்து ராசிகளுக்கும் செல்ல இவருக்கு 30 வருடங்கள் ஆகும். ஆகையால் ஏழரை நாட்டு சனிக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, ஒவ்வொரு கட்டமும் இரண்டரை ஆண்டுகளுக்கு இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022, ஏப்ரல் 29 ஆம் தேதி, சனி தனது சொந்த ராசியான கும்பத்திற்கு மாறினார். இப்போது சனியின் பிற்போக்கு இயக்கம் ஜூன் 5 ஆம் தேதி தொடங்கியது. சனி மீண்டும் ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியில் நுழைவார். அடுத்த ஆண்டு ஜனவரி 17, 2023 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி மாறுவார். 


சனியின் மாற்றத்தால் ராசிகளில் ஏற்படும் தாக்கம் 


ஜூன் 5ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார். இதன் காரணமாக 3 ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலும் 2 ராசிக்காரர்கள் சனி தசையின் தாக்கத்திலும் சிக்கவுள்ளனர். ஜூன் 5, 2022 முதல் மார்ச் 29, 2025 வரை சனி கும்ப ராசியில் இருப்பார். இந்த நேரத்தில் கும்ப ராசி சனியின் கோபத்திற்கு ஆளாகும். 


மற்ற ராசிகள் மீது இதன் தாக்கம் பற்றி காணலாம்:


மகரம்:


மகர ராசிக்காரர்களுக்கு இது ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ள காலம். ஏப்ரல் 29 முதல் தொடங்கிய ஏழரை நாட்டு சனி 2022 ஜூலை 11 வரை நீடிக்கும். இது மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டமாகும். 


மேலும் படிக்க | இந்த தானங்கள் செய்தால் உங்கள் தலைமுறைகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்! 


கும்பம்:


சனியின் இந்த சஞ்சாரத்தின் அதிகபட்ச பலன் கும்பத்தில் காணப்படுகிறது. இந்த நேரத்தில் இவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் சோம்பலை விட்டு கடின உழைப்பில் கவனம் தேவை. இதனுடன், உங்கள் செலவுகளையும் கட்டுப்படுத்தவும்.


மீனம்:


ஜோதிட சாஸ்திரப்படி மீன ராசிக்காரர்களுக்கு ஜூலை 12-ம் தேதி வரை ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் மீன ராசிக்காரர்கள் எந்த ஒரு முடிவையும் பொறுமையாக, சிந்தனையுடன் எடுக்க வேண்டும். இல்லையெனில், சில இழப்புகளையும் சந்திக்க நேரிடும்.


இவர்கள் சனி தசையின் தாக்கத்தில் உள்ளார்கள். 


இந்த நேரத்தில் விருச்சிகம் மற்றும் கடக ராசிக்காரர்கள் சனி தசையின் தாக்கத்தில் உள்ளார்கள். மேலும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு, இந்த தசை நீடிக்கும். இதனால், இவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.


சனி தேவரை மகிழ்விக்க பரிகாரங்கள்


மகரம்: ஒவ்வொரு சனிக்கிழமையும், முடிந்தால் தவறாமல் சிவபெருமானை வழிபடவும். அரச மரத்தின் அருகில் சனி பகவானின் மந்திரங்களை பாராயணம் செய்யவும். 


கும்பம்: சனியின் மந்திரங்களை பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.


மீனம்: நல்ல நேரத்தில், ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.


துலாம்: ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு கருப்பு நாய்க்கு உணவளிக்கவும்.


விருச்சிகம்: சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.


மிதுனம்: சனி அமாவாசை அன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் சனியை வழிபடவும். சனி மந்திரம் சொல்லுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஜூலையில் இவர்களின் மீது சனியின் தாக்கம் தீரும், அபரிமிதமான வெற்றி கிடைக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR