இந்த தானங்கள் செய்தால் உங்கள் தலைமுறைகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்!

Dhanam Benefits: உங்களிடம் இருப்பதில் கொடுப்பது தானம்! இருப்பதையே கொடுப்பது தர்மம். பலன் கருதாமல் கொடுப்பது தான் அறம்.

Written by - Vidya Gopalakrishnan | Edited by - Shiva Murugesan | Last Updated : Jun 23, 2022, 04:22 PM IST
இந்த தானங்கள் செய்தால் உங்கள் தலைமுறைகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்! title=

Dhanam Benefits: இந்து மதத்தில் தானத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சில வகை தானங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் என்பது மத நம்பிக்கை. ஏழைகளுக்கு உணவு, ஆடை, மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு. அமாவாசை, சிரார்த்தம், கிரகணம் போன்ற விசேஷ நாட்களில் தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள 7 வகையான தாங்கள் சிறப்புப் பலன்களை கொடுக்கின்றன.

அன்னதானம்
தானங்களில் சிறந்தது அன்னதானம். தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும் என்பது மத நம்பிக்கை. அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

கோ தானம்
இந்து தர்மத்தில் கோ தான்ம் என்னும் பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வது பல பிறவிகளுக்கும் பல தலைமுறைகளுக்கும் நன்மை பயக்கும். 

நெய் தானம்
நெய் தானம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜோதிட சாஸ்திரப்படி, தேவைப்படுபவர்களுக்கு பசு நெய்யை தானம் செய்வது சுப பலன்களை கொடுக்கும். இது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கான வழி திறக்கிறது.

உப்பு தானம்
உப்பை தானம் செய்வதும் மிகவும் சிறப்பு. சிரார்த்தத்தின் போது உப்பு தானம் செய்வதால், பலன்கள் பன்மடங்காகும்

ஆடை தானம்
ஏழை எளியோருக்கு புதிய சுத்தமான ஆடைகளை தானம் செய்வதால் சிறந்த பலன் கிடைக்கும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும்.

எள் தானம்
அமாவாசை அன்று எள் தானம் செய்வதன் சிறப்பு ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஷ்ராத்தம் அல்லது ஒருவரின் மரணத்தின் போது கருப்பு எள்ளை தானம் செய்வதால், பல பிரச்சனைகள் மற்றும் பேரழிவுகளில் இருந்து  ஒருவரை பாதுகாக்க முடியும்.

வெல்லம் தானம்
வெல்லம் தானம் செய்வதால் வறுமை நீங்கி, வாழ்க்கைக்கான முன்னேற்ற வழி திறக்கும். மறுபுறம் வெல்லம் தானம் செய்வது மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News