Navpancham Yog Formed By Guru Ketu Yuti: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இப்படி கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும்போது சில குறிப்பிட்ட நிலைகளின் அடிப்படையில் கிரகங்களின் சேர்க்கையும் நடக்கின்றன. இதனால் சில விசேஷ யோகங்கள் உருவாகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மே மாதம் 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். கன்னி ராசியில் கேது உள்ளார். இந்த நிலைகளில் இந்த இரு கிரகங்களும் இருப்பதால் சிம்ம ராசியில் நவம யோகம் உருவாகின்றது. குருவும் கேதுவும் இணைந்து நவபஞ்சம யோகத்தை உருவாக்குகிறார்கள்.


நவபஞ்சம யோகம்


நவபஞ்சம யோகம் சுபமான யோகமாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக நீண்ட நாட்களாக பல பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு இது பலவித நிவாரணங்களை கொண்டு வரும். இவர்களது நீண்ட நாள் தொல்லைகள் தீர்வதோடு பலவித நல்ல செய்திகளையும் இவர்கள் பெறுவார்கள். நவபஞ்ச யோகம் அனைத்து ராசிகளிலும் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு பணியிடத்தில் ஏற்றம் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.


ரிஷபம் (Taurus)


ரிஷப ராசிக்காரர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவர்களுடைய கடின உழைப்பிற்கான பலன் இப்பொழுது முழுமையாக கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வாகனம், சொத்து வாங்கும் யோகம் உருவாகலாம். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வர வாய்ப்புள்ளது. வணிகத்திலும் உங்களுடன் புதிய நபர்கள் இணைவார்கள். இதனால் உங்களுக்கு அனுகூலமான சூழல் உருவாகும்.


சிம்மம் (Leo)


சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் கேதுவால் உருவாகும் நவபஞ்ச யோகம் சுபமாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வெளிநாட்டு பயணத்தால் பல அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். பணியிடத்திலும் வெற்றிகளை குவிப்பீர்கள். புதிய வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும். வர்த்தகத்தில் சிக்கி இருந்த பணம் இப்பொழுது திரும்ப கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேண்டிய வகையில் வேலை கிடைக்கும்.


மேலும் படிக்க | அலட்சியப்படுத்தக்கூடாத மரண அறிகுறிகள்! இது சிவபுராணத்தின் உமா சம்ஹிதை இறப்பு ரகசியம்...


கன்னி (Virgo)


வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு முன்பிருந்ததை விட இப்பொழுது லாபம் அதிகரிக்கும். நவபஞ்சம யோகத்தின் காரணமாக வணிகம் பெருகும். வணிக முதலீடுகளால் பிரச்சனைகள் இருந்தவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பார்கள். சிறு வியாபாரிகள் பெரிய நன்மைகளை பெறுவார்கள். அலுவலகப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்காளுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். நல்ல ஊதியத்துடன் புதிய வேலைக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.


விருச்சிகம் (Scorpio)


விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல பணித்திட்டங்களை செய்யும் பொறுப்பு கிடைக்கும். இவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பதால் நல்ல பண வரவும் இருக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளை பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.


மகரம் (Capricorn)


மகர ராசிக்காரர்களுக்கு வர்த்தகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். இந்த ஒப்பந்தங்களால் அதிகப்படியான லாபம் கிடைக்கும். சட்ட சிக்கல்களில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகளை பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். இவற்றை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணி இடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம், வெற்றி... இந்த ராசிகளுக்கு குரு அருள், ராஜயோகம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ